டாப்ஸி பன்னுவின் நடிப்பில், சபாஷ் மிது திரைப்படம், இந்திய பெண்கள் கிரிக்கெட்டை மாற்றியமைத்த இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
Also Read | பச்சை வேட்டி கட்டி நடிகை மாளவிகா மோகன் செல்ஃபி.. இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ!
2022 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய பெண்கள் அணியின் கேப்டனாக பல உலக சாதனைகளை முறியடித்து சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜின் வாழ்க்கையை இப்படம் விவரிக்க உள்ளது.
2022 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான சபாஷ் மிது திரைப்பட டிரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இப்படத்தில் டாப்ஸி பண்ணு டைட்டில் ரோலில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் ராஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
இப்படத்தை Viacom18 Studios தயாரித்துள்ளனர், சபாஷ் மிதுவின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அஜித் அந்தாரே பணியாற்ற, ஸ்ரீஜித் முகர்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார் மற்றும் ப்ரியா அவென் இப்படத்தினை எழுதியுள்ளார். இப்படம் ஜூலை 15 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது.
இப்படத்தின் ரிலீசை ஒட்டி பல்வேறு நிகழ்வுகளில் நடிகை டாப்ஸி பங்கெடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக வண்ணமயமான ஆடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் டாப்ஸி தொடர்ந்து வெளியிட்டுள்ளார். தற்போது நீல நிற உடையில் நவநாகரீக தோற்றத்தில் போட்டோக்களில் டாப்ஸி காட்சியளிக்கிறார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாலில் பதிவேறறாமல் ஸ்டோரியில் பதிவேற்றி உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது செம்ம வைரலாகி வருகின்றன.
Also Read | பிரபல OTT-க்காக ஷாருக்கான் தயாரிப்பில் ஆலியாபட் நடிக்கும் புதிய படம்.. வெளியான கலக்கல் டீசர்!