'ஓ சொல்றியா மாமா' பாட்டுக்கு ஆட்டம்.. ஒரே‌ நாள்ல உலக ட்ரெண்ட் .. யாருப்பா இந்த கிலி பால்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புஷ்பா படத்தில் இடம்பெறும் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு  டிக்டாக் பிரபலம் கிலி பால் ப்ரேக் டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

tanzanian social media star kili paul dances on Oo antavaa song
Advertising
>
Advertising

அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா நடித்த படத்தில் சமந்தா ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார் என்பதும், 'ஓ சொல்றியா மாமா' என்று தொடங்கும் இந்த பாடல் இளசுகளை துள்ளச் செய்து வைரலாகியுள்ளது.  இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடி அதன் வீடியோவை இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

tanzanian social media star kili paul dances on Oo antavaa song

இந்தப் பாடலானது ஆண்களை இழிவுபடுத்தும் விதமாக எழுதப்பட்டிருப்பதாக, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஆண்கள் சங்கம் சார்பில் வழக்கும் தொடரப்பட்டது. இத்திரைப்படத்தின் வெற்றிக்குக் கூட 'ஓ சொல்றியா மாமா' பாடலில், சமந்தாவின் கவர்ச்சி நடனமே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பிக்பாஸ் பிரபலங்கள் நடனமாடி அசத்தி வரும் நிலையில், தாமரை செல்வியும் இப்பாட்டிற்கு நடனமாடும் வீடியோ இன்ஸ்டா பக்கத்தில் வெளியானது. இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார்.  இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் தற்போது மெகா ஹிட் ஆகியுள்ளன. அத்துடன் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா பாடல் மின்னல் வேகத்தில் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது. பாடல்களை காண்போர், வரிகளை ரசிப்பவர்கள் இருந்தாலும், நடனமாட வைக்கும் பாடலை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது. தான்சான்யாவை சேர்ந்த பிரபலமான டிக்டாக் டான்சர் கிலிபால் ஓ சொல்றியா மாமா தெலுங்கு பாடலுக்கு ப்ரேக் டான்ஸ் ஆடும் வீடியோவை  இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

இசைக்கு மொழி தேவையில்ல என்பதற்கிணங்க  சமூக வலைத்தளங்களில் கிலி பால் மற்றும் அவரது சகோதரி நீமாவை  கண்டு ரசிக்காத இந்தியர்களே இல்லை . டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியில் கலக்கி வரும் இவர்கள் இருவரும் இந்தி தெரிந்தவர்கள் போல பாடல்களுக்கு வாயசைப்பது மற்றும் முக பாவனைகள் செய்வது என பலரின் கவனத்தை ஈர்த்தனர். இந்தி படங்களை அதிகம் பார்ப்பதால் ஹிருத்திக் ரோஷன், சல்மான் ஆகியோரை ரொம்ப பிடிக்குமாம்.

தான்சான்யா பகுதியில் வசிக்கும் மக்களின் பாரம்பரிய உடையில் கிலி பால் ஆடும் விடியோ தான் சென்சேஷன் ஆகியுள்ளது. ஓ சொல்றியா மாமா வீடியோ 144,000 க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இந்தியர்களின் அன்பு அவ்வளவு தூய்மையானது. அவர்கள் போலியானவர்கள் இல்லை என்றும் அவர்களது அன்பால் எனது இன்பாக்ஸ் முழுவதும் நிறைந்துவிட்டது அண்மையில் கிலி பால் தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Tanzanian social media star kili paul dances on Oo antavaa song

People looking for online information on Allu Arjun, Kili paul, Oo antava song dance, Pushpa movie, Pusupa item song, Samanthas, Samntha dance, Social media dancer will find this news story useful.