பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா தற்போது பகிர்ந்துள்ள இன்ஸ்டா பதிவு, இணையத்தில் அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

Also Read | Breaking: "வாரிசு படத்தில் விஜய்யோட பேரு இது தானா??.." அதிரடி 'Update'.. "கூடவே இன்னொரு சர்ப்ரைஸும்.."
பிரபல பாலிவுட் நடிகையும், தமிழில் விஷால் நடித்த "தீராத விளையாட்டு பிள்ளை" திரைப்படத்தின் கோலிவுட்டில் பிரபலமான நடிகை தனுஸ்ரீ தத்தா, கடந்த 2008 ஆம் ஆண்டும் போது மீ டு இயக்கத்தில் பாலிவுட் பிரபலங்கள் சிலர் மீது பாலியல் புகார்களை அளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவு ஒன்றை வெளிப்படுத்தி, தனக்கு நேர்ந்த துன்புறுத்தல்கள் மற்றும் மனக்குறைகளை வெளிப்படுத்தி உள்ளார்.
தனுஸ்ரீ வெளியிட்டுள்ள பதிவில், "நான் துன்புறுத்தப்படுகிறேன். மிக மோசமாகவும் பலர் என்னை இலக்காக வைத்துள்ளார்கள். தயவு செய்து யாராவது எதையாவது செய்யுங்கள்.
முதலில் எனது பாலிவுட் பயணத்தை பலரும் நாசம் செய்தார்கள். தொடர்ந்து பணியாள் மூலம் குடிக்கும் தண்ணீரில் மாத்திரைகள் தூவினார்கள். இதன் காரணமாக, எனக்கு தீவிரமான உடல் பிரச்சினைகளும் ஏற்பட்டது. மேலும் நான் உஜ்ஜைனுக்கு தப்பித்து சென்ற போது, எனது காரின் பிரேக் இரண்டு முறை வெட்டப்பட்டதால், விபத்தும் நேரிட்டது. கிட்டத்தட்ட சாவில் இருந்து மீண்டு வந்த நான், மீண்டும் மும்பைக்கு திரும்பி எனது இயல்பு வாழ்க்கை மற்றும் வேலையை பார்க்க ஆரம்பித்தேன். இப்போது எனது ஃப்ளாட்டுக்கு வெளியே வினோதமான மற்றும் அருவருப்பான விஷயங்கள் நடந்து வருகின்றது.
நான் தற்கொலை செய்து கொள்ளப் போவதில்லை. இதனை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். நான் எங்கேயும் ஓடிப் போக மாட்டேன். நான் இங்கு தான் இருப்பேன். என்னுடைய புது வாழ்க்கையை முன்பு போல் இல்லாத அளவிற்கு நான் புதுப்பிக்க உள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.
அதே போல தனுஸ்ரீ தத்தாவின் இன்ஸ்டா பதிவில், பாலிவுட் மாபியா மற்றும் மகாராஷ்டிரா அரசியல் வட்டத்தை சேர்ந்தவர்கள் தொந்தரவு செய்கிறார்கள் என்றும், மீடூ விவகாரத்தின் காரணமாக தான் என்னை அவர்கள் தொந்தரவு செய்ய வேண்டும், இல்லையென்றால் நான் ஏன் இப்படி டார்கெட் செய்யப்பட்டு துன்புறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read | 'கோலமாவு கோகிலா' இந்தி ரீமேக்.. பட ரிலீசை முன்னிட்டு ஜான்வி கபூர் போட்டோஷூட்! வைரல் போட்டோஸ்!