மும்பை: நடிகை தமன்னா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
பல தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் மதுர் பண்டர்க்கார், பெண்களை முதன்மைப்படுத்தும் தனிச்சிறப்பு வாய்ந்த கதைகளை வழங்குவதில் மிகஉயரிய படைப்பாளியாக அறியப்படுகிறார்.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ மீண்டும் ஒருமுறை பிக்சர்ஸ் இரண்டும் இணைந்து தயாரிக்கும் இந்த பப்ளி பவுன்சர் திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான 'பவுன்சர் நகரமான' அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட ஒரு பெண் பவுன்சரின் கற்பனைக் கதையாகும்.
தமன்னா நடிப்பில் பிப்ரவரி 18 அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு 5 நாட்களே பாக்கி உள்ளதாக நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
பப்லி பவுன்சர் திரைப்படம் பவுன்சர்களின் முன் பின் அறியாத உலகத்தை ஆராய்கிறது. மேலும் இதில் சவுரப் சுக்லா அத்துடன் அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹில் வைத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கருத்துரு, கதை மற்றும் திரைக்கதை: அமித் ஜோஷி, ஆராதனா தேப்நாத் மற்றும் மதுர் பண்டர்கார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.
https://www.behindwoods.com/bgm8/