சிவகார்த்திகேயன் #SK20 படத்துக்கு பேர் இன்னும் வைக்கல... அதுக்குள்ள விற்ற தமிழக தியேட்டர் உரிமை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மதுரை:  சிவகார்த்திகேயனின் SK  20 படத்தின் தமிழக உரிமையை பிரபல வினியோகஸ்தர் கைப்பற்றி உள்ளார்.

Advertising
>
Advertising

இது நம்ம ஷிவானியோட ஜாலியோ ஜிம்கானா..! அதுவும் அந்த டான்ஸ் ஸ்டெப் வேற மாரி வேற மாரி!

சிவகார்த்திகேயன், நவீன் பாலிஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை திரைப்படமான ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் SK20 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த புதிய சிவகார்த்திக்கேயன் படத்தை தயாரிக்கின்றன.

இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் வில்லனாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் 8 வருடங்களுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் நவீன் பொலிசெட்டியும் நடிக்க உள்ளார். தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைகுடியில் கடந்த 10.02.2022  அன்று துவங்கி உள்ளது. படக்குழு காரைக்குடி அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினர். காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக படமாக்கப்படவுள்ளது.

சில நாட்களுக்கு முன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை Maria Ryaboshapka மரியா ரியாபோஷாப்கா நடிக்க இருக்கிறார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இவர் போலந்து-உக்ரேனிய திரைப்படமான 'ஈடர்' இல் பணிபுரிந்துள்ளார் மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஸ்பை சாகா ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5 இல் 'நடாஷா' என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.

இந்நிலையில் SK 20 படத்தின் தலைப்பு, முதல் லுக் போஸ்டர் இன்னும் அறிவிக்கப்படுவதற்குள்ளே படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் வலிமை படத்தை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இந்தியா முழுதும் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் KGF முதல் பார்ட்.. முழு தியேட்டர் லிஸ்ட்

தொடர்புடைய இணைப்புகள்

Tamilnadu Theatrical rights of SK20 acquired by Gopuram Cinemas

People looking for online information on Gopuram Cinemas, Sivakarthikeyan, SK20, Tamilnadu Theatrical rights will find this news story useful.