விக்ரம் படத்தின் சிறப்பு காட்சிகள் குறித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
"விக்ரம்" படத்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசைய்மைக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக நாளை ஜூன்-3 அன்று வெளியாகிறது.
தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் தமிழக அரசு விக்ரம் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், ராஜ்கமல் நிறுவனத்தின் கோரிக்கைக்கு இணங்க, விக்ரம் படத்தின் ஜூன்3 முதல் 5 வரை சிறப்புக்காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த சிறப்பு காட்சிகள் குறித்த தகவலை அந்ததந்த பகுதி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை தமிழ்நாடு சினிமா கட்டுப்பாட்டு விதி 1957-ன் படி தமிழக அரசு வழங்கியுள்ளது. (அரசாணை எண் 459 - தேதி:02.06.2022)