தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த சங்க பொதுக்குழுவில் பாரதிராஜாவை இயக்குனர் சங்க புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்தனர். தேர்தல் நடத்தாமல் பாரதிராஜாவை தேர்வு செய்ததற்கு விமர்சனங்கள் கிளம்பின.
சில தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு பாரதிராஜா போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் இயக்குனர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாரதிராஜா திடீரென அறிவித்தார். இதனை அடுத்து, திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை ஜூலை 14ம் தேதி நடத்துவதென ஜூன் 10ம் தேதி நடந்த பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.
பின்னர், தேர்தல் அதிகாரி வருகிற ஜூலை 21ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார். இதன்படி தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலுக்கான வாக்கு பதிவு நேற்று நடைபெற்றது.
இந்த தேர்தலில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக ஆர்.கே.செல்வமணி அவர்களும், பொது செயலாளராக ஆர்.வி.உதயகுமார் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் பொருளாளராக பேரரசு அவர்களும், இணைச் செயலாளர்களாக கே.எஸ்.ரவிக்குமார் அவர்களும், ரவிமரியா, அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.