யூடியூப் வீடியோஸ்.. நாட்டாமை விளம்பரம்.‌.. இப்ப நயன்தாராவுக்கு பையன்‌.‌. ரித்து ராக்ஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல யூடியூப் குழந்தை நட்சத்திரம் ரித்விக், நயன்தாராவுடன் நடித்துள்ள O2 படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | அஜித் நடிக்கும் AK61.. ஷூட்டிங் எப்போ முடியும்? பட ரிலீஸ் எப்போ? போனிகபூர் கொடுத்த EXCLUSIVE அப்டேட்

இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாராவின் 8 வயது பையனாக ரித்விக் நடித்துள்ளார். ரித்விக் ஏற்கெனவே யூடியூப்பில் பல வேடங்களில்  ஆண், பெண், வாலிபர், முதியவர், போலீஸ் என்று பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்.  இவருடைய காமெடி வீடியோக்களுக்கு செம்ம ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

போன தீபாவளிக்கு போத்திஸ் ஜவுளிக்கடையின் விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்றார். இவருடைய முக பாவனைகள், வசன உச்சரிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நாட்டாமை பாணியில் அமைந்த இந்த விளம்பரம் டிவிக்களில் சூப்பர் ஹிட் அடித்தது.

சென்ற ஆண்டு டிசம்பரில் ரித்விக், நயன்தாரவுடன் நடிக்க இருப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. இச்சூழலில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில் ரித்விக் தோன்றும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதயத்துடிப்பை எகிறவைக்கும் பரபரப்பான த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக  எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான்  “O2”. தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீணா, RNR மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் பரத் நீலகண்டன் நடித்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

 

Tamil you tuber child actor ritvik movie teaser released and goes viral

People looking for online information on Nayanthar, Ritvik movie teaser, Tamil you tuber, Tamil you tuber child actor ritvik will find this news story useful.