தமிழ் சினிமா சூப்பர் ஸ்டாரும் இந்திய பிரபல நடிகருமான ரஜினிகாந்த், நேற்று தன்னுடைய 72-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
தமிழ் திரை உலகில் 70 களின் பிற்பகுதியில் இருந்து தற்போது வரை முன்னணி நடிகராக உச்சத்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். வசூல் ரீதியாக வெற்றிப்படமாக இந்த அண்ணாத்த படம் அமைந்தது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 12-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் ரஜினி ரசிகர்களால் தமிழகம் தாண்டியும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தநாளில் ரஜினிகாந்தை பல முன்னணி நடிகர்கள், அரசியல்வாதிகள், அரசு அமைச்சர்கள். விளையாட்டு வீரர்கள் என பலர்தொலைபேசியிலும், சமூகவலைதளங்களிலும் வாழ்த்துவர்.
இவ்வாறு வாழ்த்தியவர்களின் பெயரை குறிப்பிட்டு ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் "என் பிறந்த நாளன்று என்னை அன்புடன் வாழ்த்திய மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுக்கும், திரு ராஜ்நாத் சிங், திரு நிதின் கட்கரி, பாராளுமன்ற சபா நாயகர் திரு. ஓம் பிர்லா, பல மாநில ஆளுநர்களுக்கும், திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், திரு.O. பன்னீர் செல்வம், திரு G.K.வாசன், திரு. திருநாவுக்கரசர், திரு. T.K. ரங்கராஜன், திரு, பொன் ராதாகிருஷ்ணன், திரு. வைகோ, திரு. அண்ணாமலை, திரு. அன்புமணி ராமதாஸ், திரு. திருமாவளவன், திரு.சீமான், திரு.தினகரன், திருமதி. சசிகலா அவர்களுக்கும், மற்றும் பல மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும், திரு. கமல் ஹாசன், திரு. இளையராஜா, திரு. பாரதிராஜா. திரு. வைரமுத்து, திரு. அமிதாப் பச்சன், திரு. ஷாருக்கான். திரு. சச்சின் டெண்டுல்கர், திரு. ஹர்பஜன்சிங், திரு. வெங்கடேஷ் ஐயர், மற்றும் பல பிரபலங்களுக்கும், திரை உலகை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும், ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும், என் நலனுக்காக கோயில்களில் பூஜைகளும், ஹோமங்களும், அன்னதானங்களும் நடத்தி பிரார்த்தனை செய்த என் ரசிக பெருமக்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அன்புடன், ரஜினிகாந்த் என குறிப்பிட்டுள்ளார்.