நடிகர் அஜித் தந்தை மறைவு.. இரங்கல் அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | BREAKING : நடிகர் அஜித் குமாரின் தந்தை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!   

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.

துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் அஜித்குமார் அடுத்ததாக லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னையில் நடிகர் அஜித் குமார் இல்லத்தில்  காலமானார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Images are subject to © copyright to their respective owners.

அவருடைய மறைவுக்கு தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் செய்திக் குறிப்பில், "“நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன்.

Images are subject to © copyright to their respective owners.

தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்." என கூறப்பட்டுள்ளது.

Also Read | ஜீவாவைத் தொடர்ந்து Pandian Stores குடும்பத்தில் இருந்து வெளியேறும் கண்ணன்..?

தொடர்புடைய இணைப்புகள்

Tamil Nadu chief minister Mk Stalin Condolences to Ajith father demise

People looking for online information on Ajith father demise, Ajith Kumar, CM MK Stalin will find this news story useful.