பாரதிராஜாவின் அறிக்கையால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி! முழு விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசு நியமனம் செய்த தனி அதிகாரியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களான பாரதிராஜா உள்பட ஏழு பேர்கள் இணைந்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையால் தயாரிப்பாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த அறிக்கை இதுதான்:

தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு வணக்கம். நமது சங்கத்திற்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு கடந்த 23.06.2019 அன்று கியூப் நிறுவனத்துடன் நடத்திய பேசுவார்த்தையின் அடிப்படையில்

1. இன்று (29.06.2019) முதல் தயாரிப்பாளர்கள் திரையிடும் பிரிவியூ காட்சி மற்றும் சென்சார் காட்சிக்கு முதல் மூன்று காட்சிக்கு கியூப் கட்டணம் இல்லை. மேலும் காட்சி தேவைப்படும் தயாரிப்பாளர்கள் தங்களுடைய ஹார்ட் டிஸ்க்கை கியூபில் கொடுத்து தங்களது திரைப்படத்தின் டிசிபிஐ காப்பி செய்து லைஃப் டைம் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

2. ஜூலை 12 முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் ஒரு நிமிட டிரைலர்களுக்கு கட்டணம் இல்லை

3. தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களுக்கான லைஃப் டைம் கியூப்புக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் ஷிப்டிங் வசதி உண்டு என்று கியூப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய இணைப்புகள்

Tamil film Producers' Council new rules Qube Cinema

People looking for online information on Bharathiraja, Tamil Film Producers will find this news story useful.