தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்... வெற்றி பெற்றாரா இயக்குநர் டி.ராஜேந்தர்???

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் நேற்று எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்றது. இதில் டி.ராஜேந்தர் தலைமையிலான அணி, தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி, தேனப்பன் தலைமையிலான அணி என மூன்று அணிகள் போட்டியிட்டன. 

இதில் பல்வேறு நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள். இந்நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். 

டி.ராஜேந்தர் 338 வாக்குகளும், தேனப்பன் 87 வாக்குகளும் பெற்றும் தோல்வியடைந்துள்ளனர். இதை தொடர்ந்து வெற்றி பெற்ற தேனாண்டாள் முரளிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தல் முடிவுகள் | Tamil film producers council election results announced

People looking for online information on Murali Ramaswamy, P.L.Thenappan, T rajender, Tamil Film Producers Council Election will find this news story useful.