தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இந்தாண்டு தேர்தல் நடக்க உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | BREAKING: சூப்பர் ஹிட் படத்தின் அடுத்த பார்ட்.. மீண்டும் இணையும் சிபி ராஜ் & சத்யராஜ்?
1500 க்கும் மேற்பட்ட சினிமா தயாரிப்பாளர்களை உறுப்பினர்களாக கொண்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அந்த தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கடந்த 2017 ஏப்ரலில் நடந்த தேர்தலில் நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் நிர்வாகிகளாக விஷால், ஸ்டூடியோ க்ரீன் கே. இ. ஞானவேல் ராஜா, ட்ரீம் வாரியர்ஸ் எஸ். ஆர். பிரபு, கௌதம் மேனன், மிஷ்கின், பிரகாஷ் ராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Images are subject to © copyright to their respective owners.
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு தயாரிப்பாளர்கள் டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி, பி.எல்.தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர். மும்முனை போட்டியில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 557 வாக்குகளும் டி.ராஜேந்தர் 388 வாக்குகளும் பி.எல்.தேனப்பன் 88 வாக்குகளும் பெற்றனர். அதிக வாக்குகள் பெற்று தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தலைவராக பதிவியேற்றார்.
இந்நிலையில் 2023 - 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read | சந்திரமுகி - 2 படத்தின் ஷூட்டிங்கில் இணையும் கங்கனா ரனாவத்.. எப்போ? எங்கே? BREAKING