தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ் ! வொர்க் ஸ்டார்ட் பண்ணலாமாம், ஆனால்...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் போது சில செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திரைத்துறை சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தது. சின்னத்திரை சங்கமும் குறைவான நபர்களைக் கொண்டு பணிகளைத் துவங்க அனுமதி கோரியிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும், கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியம் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளதால், இத்தருணத்தில்  தயாரிப்புக்கு பிந்தய Post Production பணிகளை செய்தவற்காக மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

மேற்கண்ட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர், கீழ்கண்ட தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளை மட்டும் 11.05.2020 முதல் மேற்கொள்ள அனுமதியளித்துள்ளார்கள்.

அதன் படி படத்தொகுப்பு, குரல் பதிவு (Dubbing), கம்ப்யூட்டர் மற்றும் விஷூவல் கிராஃபிக்ஸ் (VFX, CGI),டிஐ  எனப்படும் நிற கிரேடிங், பின்னணி இசை, ஒலிக்கலவை (Sound Design/ Mixing) ஆகிய பணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகளை அதிகபட்சம் 5 நபர்களைக் கொண்டும், VFX , CGI பணிகளுக்கு மட்டும் 10 முதல் 15 நபர்களை கொண்டும் மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், Post Production பணிகளை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள், இப்பணியில் ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டுக்களை பெற்று தந்து, அவர்கள் சமூக இடைவெளியிடனும் முகக் கவசம் கிருமி நாசினி உபயோகித்தும் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றி பணி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Tamil Cinema to restart their post production works on this date ft Master, Cobra, Soorarai Pottru | தமிழ் சினிமா போஸ்ட் புரொடக்சன் பணிகளை தொடங்குவது குறி

People looking for online information on Coronavirus lockdown, Post Production, Tamil cinema will find this news story useful.