ஒரே நேரத்தில் மூன்று தெலுங்கு படங்கள்.. வேற லெவலில் கலக்கும் பிரபல தமிழ் சினிமா நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரே நேரத்தில் மூன்று தெலுங்கு படங்களில் நாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா மேனன் 

Tamil cinema Actress ishwarya menon new telugu movies list
Advertising
>
Advertising

தெனிந்திய திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். தற்போது முன்னணி நாயகர்கள் நடிக்கும் மூன்று பிரமாண்ட தெலுங்கு படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

’தமிழ் படம் 2, ’நான் சிரித்தால்’ படங்கள் மூலம் தமிழ் இளைஞர்களின் நெஞ்சங்களை கவர்ந்த, நாயகி ஐஸ்வர்யா மேனன் தற்போது தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

Tamil cinema Actress ishwarya menon new telugu movies list

UV Creations  தயாரிப்பில், தமிழில் “வலிமை” படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த நடிகர் கார்த்திகேயா நாயகனாக நடிக்க, பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்கிறார். அதைத்தொடர்ந்து  இளம் நடிகர் நிகில் நடிக்க, Ed entertainment தயாரிப்பில் இயக்குநர் கேரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். 

இந்நிலையில், தற்போது முன்ணனி தெலுங்கு நடிகர் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் இப்ப்டத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

தமிழில் ரசிகர்களின் இதய நாயகியாக கோலோச்சியவர், தற்போது தெலுங்கு ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொள்ளவுள்ளார். இது தவிர தற்போது சில  தமிழ் படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Tamil cinema Actress ishwarya menon new telugu movies list

People looking for online information on ஐஸ்வர்யா மேனன், Ishwarya Menon, Karthikeya, Valimai, Valimai villain will find this news story useful.