VIDEO: ஓட்டு வீட்டில் நடிகர் ஹரி வைரவன் உடல்.. நடிகர் சங்க உதவியை எதிர்பார்க்கும் மனைவி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஹரி வைரவன் மறைவு அவருடைய கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் வெண்ணிலா கபடிகுழு. விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் அவருடன் அப்புகுட்டி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி உட்பட பலர் நடித்து இருந்தார்கள்.

மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஹரி வைரவன்.  இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட சில படங்களிலும்  நடித்திருக்கிறார்.

ஹரி வைரவன் இன்று நடு இரவில் 12.30 மணியளவில் மரணம் அடைந்துள்ளார். மதுரையை சார்ந்த ஹரி வைரவன் மரணம் ரசிகர்கள் & சக நடிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில் உள்ள கடச்சனேந்தல் முல்லை நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஹரி வைரவன் உடல்  வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடு, உடைந்த ஓட்டு வீடாக காட்சியளிக்கிறது.

நடிகர் ஹரி வைரவனுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு கவிதா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில்  தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. வாழ்வாதார உதவிகளுக்காகவும் குழந்தையின் படிப்புக்காகவும் பொருளாதார ரீதியாக உதவிகளை கேட்டு நடிகர் ஹரி வைரவனின் மனைவி கவிதா நடிகர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

VIDEO: ஓட்டு வீட்டில் நடிகர் ஹரி வைரவன் உடல்.. நடிகர் சங்க உதவியை எதிர்பார்க்கும் மனைவி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Tamil Cinema Actor Hari Vairavan homage at Madurai House

People looking for online information on Hari vairavan, Tamil cinema will find this news story useful.