பிரபல நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசனிடம் 'உங்களுக்கு இந்தி தெரியுமா?' என ஒரு ரசிகர் கேட்க அவரை வார்த்தைகளால் விளாசித் தள்ளியிருக்கிறார் ஸ்ருதி. பிரபல நடிகர் கமலஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தாலும் 'லக்' என்னும் இந்திப் படத்தில் தான் முதன்முதலில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிப் படங்களில் அவர் நடித்து வருகிறார்.
திடீரென போனிகபூர் வெளியிட்ட 'வலிமை' படத்தின் புதிய போஸ்டர்கள்!
இந்தி தெரியுமா?
இயல்பாகவே ஸ்ருதி இந்தியில் சரளமாக பேசக் கூடியவர் என்றாலும், அவரை தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு அதனால் அவருக்கு இந்தி தெரியுமா? என்னும் பொருள்பட ஒரு ரசிகர் கேள்வி எழுப்ப இதனால் ஸ்ருதி கடுப்பாகியிருக்கிறார்.
சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களின் கேள்விகளுக்கு ஸ்ருதி பதில் அளிக்கும் வேளையில் தான் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. அந்த ரசிகர்," நீங்கள் தென்னிந்தியாவில் இருந்து வருகிறீர்கள். உங்களுக்கு இந்தி தெரியுமா?" எனக் கேட்டிருக்கிறார்.
இதற்கு பதிலளித்த ஸ்ருதி ஹாசன்,"தென்னிந்தியா என்ன வேற்று கிரகமா? நாம் எல்லோரும் படங்கள் எடுக்கிறோம். எல்லோரும் கடுமையாக உழைக்கிறோம். பாரபட்சம் பார்ப்பதற்கு 2022 இல் இடமில்லை" என்று கோபத்துடன் கூறியுள்ளார்.
சினிமா துறையில் வட இந்திய மற்றும் தென்னிந்திய சினிமா என்னும் கண்களுக்குத் தெரியாத பிளவு இருந்துகொண்டே தான் இருக்கிறது. சினிமா மட்டுமல்லாது அரசியல் களங்களிலும் இந்த வேற்றுமையை காண முடிகிறது. சினிமா பிரபலங்களுக்கு இம்மாதிரி சிக்கல்கள் வரும்போது அவை பூதாகாரமாகின்றன.
இந்தி தெரியாது போடா
அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் டெல்லி விமான நிலையத்தில் தனக்கு இந்தி தெரியாத காரணத்தால் விமான நிலைய ஊழியர்கள் தன்னை மோசமாக நடத்தியதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். தமிழர் என்று தன்னை அதிகாரிகள் இகழ்ந்து பேசியதாக வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். அதனால் அப்போது இந்தி தெரியாது போடா என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகளை அணிந்து பல்வேறு திரைத் துறையினர் மற்றும் பிரபலங்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
அதேபோல, திமுக எம்பி கனிமொழி கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றபோது அவரிடம், "நீங்கள் இந்தியரா?" என அங்கு பணியிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப்படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் கேட்ட நிகழ்வு சர்ச்சையானது.
இதையடுத்து, கனிமொழியை டெல்லி விமான நிலையத்திலேயே சந்தித்து நடந்த சம்பவம் தொடர்பாக சிஐஎஸ்எஃப் உயரதிகாரிகள் வருத்தும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினர்.
மேலும், எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் நிர்ப்பந்திப்பது தங்களுடைய படையின் கொள்கை கிடையாது என்றும் சிஐஎஸ்எஃப் தலைமையகம் அதன் டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் Hollywood ஸ்டைலில் உருவாகும் புதிய படம்! வைரலாகும் BTS புகைப்படம்