நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரி தனது சமூக வலைதள பக்கத்தில் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் நாள் திருமணம் செய்துக் கொண்டனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விட ஒரு வயது மூத்தவர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் நேற்று இரவு தங்களின் விவாரகத்து முடிவை அறிவித்தனர். 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக அவர்கள் அறிவித்தது, ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களுக்கும் ஷாக் ஆகியுள்ளனர்.
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து : டிவிட்டர் டிரெண்டிங்கில் ரசிகர்களின் நம்பிக்கை வார்த்தைகள்!
நடிகர் தனுஷ் வெளியிட்ட அறிக்கையில், '18 வருடங்களாக நண்பர், தம்பதி, பெற்றோர் மற்றும் நலம் விரும்பியாக நாங்க இருந்து இருக்கிறோம்' எங்கள் வாழ்க்கை பயணம் பல புரிதல்களோடு நெடுந்தூர பயணமாக இருந்தது. இன்று முதல் எங்களுடைய பயணம் வெவ்வேறாக இருக்க முடிவு செய்து இருக்கிறோம். நானும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து முடிவு எடுத்து இருக்கிறோம். எங்கள் முடிவுக்கு மரியாதை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் அப்பா மடியிலேயே தஞ்சம் அடைவது போல் குழந்தை பருவத்தில் ரஜினியுடன் இருக்கம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
'அதிகாலையில் சேவலை எழுப்பி'.. யாருங்க அது.. இந்த ஓட்டம் ஓடுறாங்க.. நீங்களே பாருங்க!
தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு ஆறுதல் கூறி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்ததில் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதி்ல், 'ஒரு நீண்ட கால உறவு முடிவுக்கு வரும்போது அது எப்போதும் வருத்தமாக இருக்கிறது. பொது கண்காணிப்பு என்ற கடுமையான பூதக்கண்ணாடியின் கீழ் அது
நடக்கும்போது அது மிகவும் கடினமாகும். சம்பந்தப்பட்ட இருவருக்கு மட்டுமே அனைத்து விவரங்களும் தெரியும். வேறு யாருக்கும் தெரியாது, தெரியவேண்டிய அவசியமும் இல்லை' என பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், 'விவாகரத்து பற்றிய எண்ணங்கள்: பெற்றோருக்கு எவ்வளவு சரியானதாக இருந்தாலும், குழந்தைகளுக்கு அது எப்போதும் தவறாகும். எங்கள் மூத்தவர்கள் சரியாகச் சொன்னார்கள். குழந்தைகளின் நலனுக்காக ஒன்றாக இருக்க வேண்டும். இது உண்மையான ஒன்று. குழந்தைகள் வந்துவிட்டால், குடும்பத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்' என பதிவிட்டுள்ளார்.