பிரபல இயக்குனர் - நடிகர் ஆர் என் ஆர் மனோகர் திடீர் உயிரிழப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர், இயக்குனர் ஆர் என் ஆர் மனோகர் சென்னை மருத்துவமனையில் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். இவருக்கு வயது 54

Advertising
>
Advertising

பேண்ட் மாஸ்டர் மற்றும் சூரியன் சந்திரன் போன்ற படங்களில் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு உதவி இயகுனராக பணியாற்றியதன் மூலம் ஆர்.என்.ஆர் மனோகர் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 இல் நகுல்-  சுனைனா நடித்த 'மாசிலாமணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிறகு, 2011 இல் இவரது இரண்டாவது படமாக 'வேலூர் மாவட்டம்' உருவானது, நந்தா மற்றும் பூர்ணா ஆகியோர் இதில் நடித்தனர்.

கள்ளழகர், தில், சுத்த பழம், யா யா, வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற  சில படங்கள் இவருக்கு பெயர் பெற்று தந்தன். இவர் அறிமுக இயக்குனர் தூ பா சரவணன் இயக்கத்தில் தற்சமயம் விஷால் நடிக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் நடித்து முடித்துவிட்டார். ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.

இவர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் ஆவார், RNR மனோகர் கடைசியாக ஆர்யா நடித்த 'டெடி' படத்தில் சாயிஷாவின் அப்பாவாக நடித்தார். கடந்த 20 நாட்களாக அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 8.30 மணியளவில் அவர் காலமானார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Tamil actor RNR Manohar passed away today due to heart attack

People looking for online information on RNR, RNR Manohar will find this news story useful.