“CAREER ஆரம்பத்துல இருந்தே… நா இதுக்காகதான் வந்தேன்”… ‘தி லெஜண்ட்’ ஆடியோ விழாவில் தமன்னா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தி லெஜண்ட் படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கு மைதானத்தில் நடந்தது.

Advertising
>
Advertising

Also Read | வேற லெவல் Update … பகத் ஃபாசில் கதபாத்திரம்... சீக்ரெட் உடைத்த ‘விக்ரம்’ படக்குழு – வைரல் Poster

தி லெஜண்ட்…

நடிகர் சரவணன் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ’தி லெஜண்ட்’படத்தை  ஜேடி –ஜெர்ரி இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்திகா திவாரி நடிக்கிறார். நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு, ரோபோ சங்கர், பிரபு, நாசர், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மறைந்த நடிகர் விவேக்கும் இப்படத்தில் நடித்துள்ளார்.  பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி ரூபன் எடிட்டிங் பணியை செய்ய, அனல் அரசு சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார்.

டிரைலர் & ஆடியோ…

இதையடுத்து நேற்று (மே 29) இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகைகளான தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ஸ்ரத்தா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், ஸ்ரீலீலா, டிம்பிள் ஹயாத்தி, நுபுர் சனோன், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் ராய்லட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு நடனமாடினர். விழாவில் தமிழ் சினிமாவின் பிரபலக் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்திப் பேசினர். பிரம்மாண்டமான இந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமன்னா…

விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகை தமன்னா “என்னுடைய சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்தே சரவணன் சார எனக்கு தெரியும். அவங்க பிராண்ட்ஸ்க்காக நிறைய விளம்பரங்களில் நடித்துள்ளேன். அவருக்கு சப்போர்ட் பண்ணதான் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அவரின் கனவு இந்த படம் மூலம் நிறைவேறியதாக நினைக்கிறேன். அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன்” எனக் கூறினார். இடையே பத்திரிக்கையாளர்கள் ”சரவணனுடன் நடிப்பீர்களா” என்று கேட்டபோது “கண்டிப்பாக நடிப்பேன்” என்று கூறினார்.

தமன்னா கடந்த பல ஆண்டுகளாக சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் பல விளம்பரங்களில் நடித்துள்ளார். சில விளம்பரங்களில் அவர் சரவணனுடன் இணைந்தும் நடித்துள்ளார்.

Also Read | கலைஞர்களின் ரயில் கட்டண சலுகை… மத்திய அமைச்சருக்கு திமுக மக்களவை உறுப்பினர் T R பாலு கடிதம்

தொடர்புடைய இணைப்புகள்

Tamannah wishing The legend movie success

People looking for online information on Tamannah, The Legend movie, The legend movie audio launch will find this news story useful.