''சூர்யாவுடன் சேர்ந்து நடிக்கணும், எனக்கு கனவு...'' - பிரபல ஹீரோயின் விருப்பம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடித்து வரும் 'சூரரைப் போற்று' படத்தின் டீஸர், மாறா, வெய்யோன் சில்லி பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

மேலும் இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் மற்றும் குனித் மோங்கா இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படதத்தில் சுதா கொங்கராவுடன் இணைந்து ஷாலினி உஷா தேவி திரைக்கதை எழுதியுள்ளார்.

இந்நிலையில் நடிகை தமன்னா ரசிகர்களின் கேள்விக்கு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு மறுபடியும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா ? என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த தமன்னா, ''சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர விருப்பம் அவருடன் வேலை செய்வது ஒரு கனவு'' என்று குறிப்பிட்டுள்ளார். சூர்யா - தமன்னா இணைந்து நடித்த அயன் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

சூர்யாவுடன் இணைந்து நடிக்க விரும்புவதாக தமன்னா தெரிவித்தார். | Tamannaah replies to her fan about Actor Actor Suriya

People looking for online information on Suriya, Tamannaah, Twitter will find this news story useful.