நடிகை தமன்னா தமிழில் கடைசியாக விஷாலின் ’ஆக்ஷன்’ படத்தில் நடித்திருந்தார். நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்து ஓடிடியிலும் தடம் பதித்துள்ளார். இவர் நடிப்பில் இந்தியில் 'Bole Chudiyan' மற்றும் தெலுங்கில் 'That Is Mahalakshmi' படங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.

இந்தியில் நடிகை ஜெனிலியாவின் கணவரும், முன்னாள் மகாராஷ்டிரா முதலமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன், நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் இணைந்து ’பிளான் ஏ பிளான் பி’ என்ற புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படம் ரிதேசுக்கு OTT-யில் முதல் அறிமுக திரைப்படமாகும். சஷாங்கா கோஷ் இயக்கும் இந்த ரொமான்டிக் காமெடி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக உருவாகிறது.
சமீபத்தில் ‘பேக் டூ தி ரூட்ஸ்’ என்ற புத்தகத்தை நடிகை தமன்னா எழுத்தாளர் லுக் கோட்டின்கோ உடன் இணைந்து எழுதி பெங்குயின் பதிப்பகத்தின் வெளியீடாக இந்த புத்தகம் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் நாள் வெளியாகி வரவேற்பை பெற்றது.
பப்ளி பவுன்சர் எனும் படத்திலும் தமன்னா நடிக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ மீண்டும் ஒருமுறை பிக்சர்ஸ் இரண்டும் இணைந்து தயாரிக்கும் இந்த பப்ளி பவுன்சர் திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான 'பவுன்சர் நகரமான' அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட ஒரு பெண் பவுன்சரின் மகிழ்ச்சியூட்டும் கற்பனைக் கதையாகும்.
மேலும் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சீரஞ்சீவிக்கு ஜோடியாக போலோ ஷங்கர் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தனது கோடை விடுமுறையை கொண்டாட மாலத்தீவுக்கு தமன்னா சுற்றுலா சென்றுள்ளார். அங்கு முதல்முறையாக நிஜ வாழ்வில் பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாலிவுட் படங்களில் தமன்னா ஏற்கனவே பிகினி உடையில் தோன்றியுள்ளார். Mövenpick Kuredhivaru MV எனும் மாலத்தீவு கடற்கரை ஹோட்டலில் இருந்து தமன்னா இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Mövenpick Resort Kuredhivaru Maldives ஒரு அழகிய சொகுசு ஹோட்டல் ரிசார்ட் மற்றும் வெப்பமண்டல சோலை ஆகும். வேலனா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 45 நிமிடங்களில் அமைந்துள்ள இந்த 5-நட்சத்திர ரிசார்ட்டில் 105 சொகுசு வில்லாக்கள் மற்றும் குடியிருப்புகள் நீரிலும் கடற்கரையிலும் அமைந்துள்ளன.
இந்த வெப்பமண்டல சோலையானது ஸ்பா, உடற்பயிற்சி மையம், குழந்தைகள் கிளப், டைவ் மற்றும் வாட்டர்ஸ்போர்ட்ஸ் மையங்கள் மற்றும் ஐந்து நட்ச்சத்திர உணவகம் உள்ளன. இந்த தனியார் தீவு, தம்பதிகள் மற்றும் குடும்பங்களுக்கு ஒரே மாதிரியான தனியுரிமை மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை வழங்குகிறது. இந்த ஹோட்டலில் ஒருநாள் வாடகை 70,000 ரூபாய் ஆகும்.