மலையாளத்தில் அறிமுகமாகும் தமன்னா.. ஹீரோ இவரா? மியூசிக் டைரக்டர் யாரு? செம்ம

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை தமன்னா அறிமுகமாகும் மலையாள படத்தின் தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | Breaking: பெரும் சோகம்.! ‘சிம்டாங்காரன்’ பாடகர் பம்பா பாக்யா மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. நடிகை தமன்னா தமிழில் கடைசியாக விஷாலின் ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்திருந்தார். நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்து ஓடிடியிலும் தடம் பதித்துள்ளார்.

தமன்னா நடிப்பில் இந்தியில் நவாசுதீன் சித்திக் உடன் 'Bole Chudiyan' மற்றும் தெலுங்கில் 'That Is Mahalakshmi' படங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.

தற்போது, வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சீரஞ்சீவிக்கு ஜோடியாக 'போலோ ஷங்கர்' படத்திலும் தமன்னா நடிக்கிறார்.

மேலும் பப்ளி பவுன்சர் எனும் படத்திலும் தமன்னா நடிக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ பிக்சர்ஸ் இரண்டும் இணைந்து தயாரிக்கும் இந்த பப்ளி பவுன்சர் திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான 'பவுன்சர் நகரமான' அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட  ஒரு பெண் பவுன்சரின் கதையாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த 'பப்ளி பவுன்சர்' செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில்  இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

  அடுத்ததாக நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் இணைந்து ’பிளான் ஏ பிளான் பி’ என்ற புதிய படம் ஒன்றில் தமன்னா நடித்து முடித்துள்ளார். 

சஷாங்கா கோஷ் இயக்கும் இந்த ரொமான்டிக் காமெடி  படம் நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக உருவாகிறது. 

இந்த திரைப்படம், வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.‌

இந்நிலையில் தமன்னா தற்போது மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார். நடிகர் திலிப் நடிக்கும் 147வது படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா பாட்டியா நடிக்க உள்ளார். இந்த படத்தை அருண் கோபி இயக்க உள்ளார். சாம் CS இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணிபுரிகிறார். உதய் கிருஷ்ணா எழுத்தாளராக பணிபுரிகிறார். விநாயகா அஜித் இந்த படத்தை தயாரிக்கிறார். ஷாஜி குமார் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோட்டரக்கரா விநாயகர் கோயிலில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது.

இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமன்னா பகிர்ந்துள்ளார்

Also Read | அஜித் பட தயாரிப்பாளருடன் இணைந்த பவன் கல்யாண்.. வெளியான புதிய படத்தின் கொலமாஸ் தமிழ் டீஸர்!

தொடர்புடைய இணைப்புகள்

Tamannaah Bhatia Malayalam Debut Movie Update

People looking for online information on Malayalam Debut Movie, Tamannaah Bhatia, Tamannaah Bhatia next Movie Updates will find this news story useful.