ஆஸ்திரேலியாவில் நடிகை தமன்னா..‌ நதிக்கரையில் நடத்திய ரம்மியமான சூப்பர் ஃபோட்டோ ஷூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை தமன்னா ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்று போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | விமானத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. இந்த நாட்டுக்கு தான் போறாங்களா? ஆஹா!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா.

நடிகை தமன்னா தமிழில் கடைசியாக விஷாலின் ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்திருந்தார். நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்து ஓடிடியிலும் தடம் பதித்துள்ளார். இவர் நடிப்பில் இந்தியில் நவாசுதீன் சித்திக் உடன் 'Bole Chudiyan' மற்றும் தெலுங்கில் 'That Is Mahalakshmi' படங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.

நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் இணைந்து ’பிளான் ஏ பிளான் பி’ என்ற புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.  சஷாங்கா கோஷ் இயக்கும் இந்த ரொமான்டிக் காமெடி  படம் நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக உருவாகிறது.

பப்ளி பவுன்சர் எனும் படத்திலும் தமன்னா நடிக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ மீண்டும் ஒருமுறை பிக்சர்ஸ் இரண்டும் இணைந்து தயாரிக்கும் இந்த பப்ளி பவுன்சர் திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான 'பவுன்சர் நகரமான' அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட  ஒரு பெண் பவுன்சரின் கதையாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாக உள்ளது. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

மேலும் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சீரஞ்சீவிக்கு ஜோடியாக போலோ ஷங்கர் படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு நடிகை தமன்னா சென்று அங்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மெல்போர்ன் நகரில் உள்ள குருசஸ் ஆற்றின் கரையில் இந்த போட்டோ ஷூட்டை நடத்தி உள்ளார்.

இந்த புகைப்படங்களை ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞர் லூயிஸ் அமல் எடுத்துள்ளார்.

Also Read | பிரான்ஸ் டூர் முடிஞ்சது.. அடுத்து இந்த நாடு தான்! ஐரோப்பாவில் பிரியா பவானி சங்கர்!

தொடர்புடைய இணைப்புகள்

Tamannaah Bhatia Latest Photoshoot in Australia Melbourne

People looking for online information on Tamannaah Bhatia, Tamannaah Bhatia Latest Photoshoot will find this news story useful.