ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த தமன்னா.. போஸ்டருடன் வெளியான தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா பாட்டியா இணைந்துள்ளார்.

Tamannaah Bhatia Joined Super Star Rajinikanth Jailer Movie
Advertising
>
Advertising

Also Read | PS2: 'பொன்னியின் செல்வன் - 2' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போ? FANS எதிர்பார்த்த முக்கிய அப்டேட்!

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் அணணாத்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்நாளில் ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா பாட்டியா இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை போஸ்டர் வடிவில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Also Read | மத்திய அரசின் பெருமைமிகு தேசிய விருதை பெற்ற நடிகை ஸ்ருதிஹாசன்.. முழு விவரம்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Tamannaah Bhatia Joined Super Star Rajinikanth Jailer Movie

People looking for online information on Jailer, Rajinikanth, Tamannaah, Tamannaah Bhatia will find this news story useful.