VIDEO: புஷ்பா-ல சமந்தா.. இப்போ தமன்னா... செம ஹாட் குத்து SONG-க்கு வேற லெவல் டான்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆந்திரா: சமந்தாவைப் போல் நடிகை தமன்னாவும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

Advertising
>
Advertising

கட்சி ஆரம்பிக்கும் கிங்ஸ்லீ??பேயை தொண்டராக சேர்க்க முடிவு..வைரலாகும் இடியட் ஸ்னீக் பீக்

நடிகை தமன்னா தமிழில் கடைசியாக விஷாலின் ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்திருந்தார். நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்து ஓடிடியிலும் தடம் பதித்துள்ளார். இவர் நடிப்பில் இந்தியில் 'Bole Chudiyan' மற்றும் தெலுங்கில் 'That Is Mahalakshmi' படங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.

இந்தியில் நடிகை ஜெனிலியாவின் கணவரும், முன்னாள் மகாராஷ்டிரா முதலமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன், நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் இணைந்து ’பிளான் ஏ பிளான் பி’ என்ற புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படம் ரிதேசுக்கு OTT-யில் முதல் அறிமுக திரைப்படமாகும். சஷாங்கா கோஷ் இயக்கும் இந்த ரொமான்டிக் காமெடி  படம் நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக உருவாகிறது.

சமீபத்தில் ‘பேக் டூ தி ரூட்ஸ்’ என்ற புத்தகத்தை நடிகை தமன்னா எழுத்தாளர் லுக் கோட்டின்கோ உடன் இணைந்து எழுதி பெங்குயின் பதிப்பகத்தின் வெளியீடாக இந்த புத்தகம் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் நாள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

பப்ளி பவுன்சர் எனும் படத்திலும் தமன்னா நடிக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ மீண்டும் ஒருமுறை பிக்சர்ஸ் இரண்டும் இணைந்து தயாரிக்கும் இந்த பப்ளி பவுன்சர் திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான 'பவுன்சர் நகரமான' அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட  ஒரு பெண் பவுன்சரின் மகிழ்ச்சியூட்டும் கற்பனைக் கதையாகும்.

மேலும் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சீரஞ்சீவிக்கு ஜோடியாக போலோ ஷங்கர் படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் அதாவது கடந்த வாரம் கோடை விடுமுறையை கொண்டாட மாலத்தீவுக்கு தமன்னா சுற்றுலா சென்றார். அங்கு முதல்முறையாக நிஜ வாழ்வில் பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் கிரண் கொரபாட்டி இயக்கத்தில் வருண் தேஜ் நடிக்கும் ‘ஹானி’ என்ற படத்தில் நடிகை தமன்னா செம கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். ‘Kodthe’ என்ற இந்த தெலுங்கு பாடலின் முழு வீடியோவும் தற்போது Youtube-ல் வெளியாகி உள்ளது.

இப்பாடலுக்கான வரிகளை ராம்ஜோகய்யா சாஸ்திரி எழுதியுள்ளார், இசையமைப்பாளர் எஸ் தமன் இசையமைத்துள்ளார்.  வரவிருக்கும் விளையாட்டு டிராமாவான ஹானி படத்தில் சாய் மஞ்ச்ரேக்கர், ஜெகபதி பாபு, உபேந்திரா, சுனில் ஷெட்டி மற்றும் நவீன் சந்திரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெனைசன்ஸ் பிக்சர்ஸ் மற்றும் அல்லு பாபி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் வருண் தேஜ் ஒரு கிக்பாக்ஸராக நடிக்கிறார். குத்துச்சண்டை வீரராக திரையில் நடிப்பதற்காக, நிபுணர்களுடன் தீவிர பயிற்சிகளை வருண் தேஜ் மேற்கொண்டார். இந்த படம் ஏப்ரல் 8 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறஹு.

ஹானிக்குப் பிறகு, வருண் தேஜ் மற்றும் தமன்னா பாட்டியா மீண்டும்  ஃபன் அண்ட் ஃப்ரஸ்ட்ரேஷன் இரண்டாம் பாகமான F3 இல் ஒன்றாக நடிக்கின்றனர்.

மாலத்தீவில் கடைசி நாள்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த செம HOT திவ்யபாரதி!

VIDEO: புஷ்பா-ல சமந்தா.. இப்போ தமன்னா... செம ஹாட் குத்து SONG-க்கு வேற லெவல் டான்ஸ்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Tamannaah Bhatia Dance video in Ghani Kodthe like Samantha

People looking for online information on Ghani Kodthe, Tamannaah, Tamannaah Bhatia, Tamannaah Bhatia Dance video will find this news story useful.