குடும்பத்தினர் & நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டிய தமன்னா.. பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை தமன்னா தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. நடிகை தமன்னா தமிழில் கடைசியாக விஷாலின் ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்திருந்தார். நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்து ஓடிடியிலும் தடம் பதித்துள்ளார்.

அண்மையில் பப்ளி பவுன்சர்  படத்திலும் தனி கதாநாயகியாக தமன்னா நடித்திருந்தார். இந்த 'பப்ளி பவுன்சர்' கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில்  இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த படம் வெளியானது.

மேலும் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் இணைந்து ’பிளான் ஏ பிளான் பி’ படத்தில் தமன்னா நடித்திருந்தார்.
சஷாங்கா கோஷ் இயக்கிய இந்த ரொமான்டிக் காமெடி  படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி நேரடியாக வெளியானது.‌

தெலுங்கில் குருதுண்டா சீதாக்களம் படத்தில் தமன்னா நடித்திருந்தார். இந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியானது.  தமன்னா நடிப்பில்  தெலுங்கில் 'That Is Mahalakshmi' படம் விரைவில் வெளிவர இருக்கின்றது. தற்போது, வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சீரஞ்சீவிக்கு ஜோடியாக 'போலோ ஷங்கர்' படத்திலும் தமன்னா நடிக்கிறார்.

 

தமன்னா தற்போது மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார். நடிகர் திலிப் நடிக்கும் 147வது படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா பாட்டியா நடிக்கிறார். இந்த படத்தை அருண் கோபி இயக்க உள்ளார். சாம் CS இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணிபுரிகிறார்.

இந்நிலையில் நடிகை தமன்னா தனது 33 வது பிறந்தநாளை (டிசம்பர் 21) கொண்டாடினார். தமன்னாவின் நண்பர்கள் திடிரென தமன்னாவின் வீட்டுக்குள் நுழைந்து சர்ப்ரைஸாக பிறந்தநாள் வாழ்த்து கூறி, தமன்னாவின் குடும்பத்தினர் முன்னிலையில் அவரை கேக் வெட்ட வைத்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Tamannaah Bhatia Birthday Celebration with Family and Friends

People looking for online information on Actress Tamannaah, Actress Tamannaah Bhatia Birthday, Tamannaah will find this news story useful.