தளபதி விஜய்யின் 'பிகில்' - கார்த்தியின் 'கைதி'யுடன் தீபாவளி ரேஸில் இணையும் இந்த படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஈகிள் ஐ புரொடக்ஷன் தயாரிப்பில் தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து உருவாகியிருக்கும் படம் 'பெட்ரோமாக்ஸ்'. 'அதே கண்கள்' இயக்குநர் ரோஹின் வெங்கடேஷன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, டான் மேக்கர்த்தூர் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டான் ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

இந்த படம் தெலுங்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு டாப்ஸி, வெண்ணிலா கிஷோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'அனந்தோ பிரம்மா' படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காகும்.

இந்நிலையில் இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தீபாவளியில் தளபதி விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Tamannaah and Yogi Babu's Petromax release Diwali with Bigil, Kaithi

People looking for online information on Bigil, Kaithi, Petromax, Tamannaah, Yogi Babu will find this news story useful.