சூப்பர் ஹிட் பட ரீமேக் - அந்த கேரக்டர்ல தமன்னா நடிக்கிறாங்களாம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 'அந்தாதுன்'. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் ஒரு சேர கொண்டாடிய இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக்காவது குறித்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதில், நிதின் ஹீரோவாக நடிக்கவுள்ள இந்த படத்தில் தபு வேடத்தில் தமன்னாவும், ராதிகா ஆப்தே வேடத்தில் நபா நடேஷும் நடிக்கிறார்களாம்.

இந்த படத்தை வசனம் எழுதி மெர்லபகா காந்தி (Merlapaka Gandhi) இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் துவங்கப்படவிருக்கிறதாம். மஹட்டி ஸ்வர சாகர் இந்த படத்துக்கு இசையமைக்க, ஹரி கே வேதாந்த் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறாராம்.

Tamannaah and Nabha Natesh finalised for Nithin's Andhadhun Remake | அந்தாதுன் ரீமேக்கில் நடிக்கும் தமன்னா மற்றும் நபா நடேஷ்

People looking for online information on Andhadhun, Nabha Natesh, Nithiin, Tamannaah Bhatia will find this news story useful.