VIDEO: "இதுக்கு ஒரு ஆர்மியே தேவப்படுதுப்பா".. ரியாலிட்டி ஷோவில் நடந்ததை பகிர்ந்த சன்னி லியோன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சன்னி லியோன் தற்போது நேரடித் திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் வெகுமக்கள் ஹீரோயினாக ரசிகர்களிடையே தமது படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில் சன்னி லியோன் தனது சமூக ஊடகத்தில் ஒரு வேடிக்கையான வீடியோவை பதிவினை பதிவேற்றியுள்ளார். அதில் சன்னி லியோனின் குழுவினர், அவருக்கு ஒரு அழகான மஞ்சள் நிற கவுனை பொருத்த போராடுகின்றனர். ஆம், நடிகை சன்னி லியோன், ஒரு ரியாலிட்டி டிவி ஷோவின்போது எடுக்கப்பட்ட, தான் உடைமாற்றும் வீடியோவை தான் தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில், தான் பங்குபெறும் ரியாலிட்டி ஷோவின் தொகுப்புக்கான ஒரு ஷாட்டுக்கு தயாராகியபோது, அவரது அணியைச் சேர்ந்த நான்கு பேர் அவரின் மஞ்சள் நிற கௌவுனின் உடையில் இருக்கும் ஜிப்பை சரி செய்ய போராடுகிறார்கள். எல்லோரும் அவரது ஜிப்பை சரி செய்ய முயற்சிக்கும் இந்த வீடியோவை தமது இன்ஸ்டாவில் பதிவிட்ட ​​சன்னி வீடியோவை "ஒரு கவுனுக்குள் என்னை சரியாக பொருத்த ஒரு ஆர்மியே தேவைப்படுகிறது." என கேப்ஷன் பதிவிட்டுள்ளர்.

அண்மையில் மே 13-ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய சன்னி, கடந்த வருடம் குழந்தை மற்றும் கணவருடன் அமெரிக்காவுக்கு சென்று கொண்டாடினார். ஆனால் இந்த ஆண்டு, சன்னி லியோன் தனது பிறந்தநாளை இந்த லாக்டவுனில்  மும்பையில் தனது குடும்பத்துடன் கொண்டாடிய நிகழ்வுகளும் இணையதளத்தில் வைரலாகின.

ALSO READ: "லாகின் பண்றதுல இவ்ளோ இருக்கா?".. இப்படியும் ஒரு படமா? வெளியான தகவல்.. வைரல் ஆகும் ஸ்டில்ஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Takes an army to make a gown Sunny leone viral video

People looking for online information on Sunny Leone will find this news story useful.