பிரபல TV-யில் ஒளிபரப்பாகும் விக்ரம் பிரபு நடித்த 'டாணாக்காரன்'.. எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் பிரபு நடித்த 'டாணாக்காரன்'திரைப்படம் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

Advertising
>
Advertising

கடந்த ஏப்ரலில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் டாணாக்காரன்.

இயக்குனர் தமிழ் இந்த படத்தை இயக்கி இருந்தார். வெற்றிமாறனிடம் ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் தமிழ். ஜெய் பீம் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தவர்.

டாணாக்காரன் படத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ். பாஸ்கர், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.  மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, பி கோபிநாத், தங்க பிரபாகரன் ஆர் உள்ளிட்டோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

'டாணாக்காரன்' படம் சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஓடக்கூடியது. டாணாக்காரன் திரைப்படத்தின் கதைக்களம் 1998ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று மதியம் 12:30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Taanakkaran world television premiere on vijay tv

People looking for online information on Taanakkaran, Vijay tv, Vikram Prabhu will find this news story useful.