‘டாணாக்காரன்’ படத்தை இயக்குநருடன் பார்த்த காவலர்கள்… அதன் பின் எடுத்த சூப்பர் முடிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டாணாக்காரன்…

Advertising
>
Advertising

விக்ரம் பிரபு நடிப்பில் எஸ் ஆர் பிரபுவின் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம நிறுவனம் டாணாக்காரன் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி ரிலீஸானது. இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபுவோடு அஞ்சலி நாயர். எம் எஸ் பாஸ்கர், லால் மற்றும் போஸ் வெங்கட்  உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமிக்க, மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவி செய்திருந்தார்.

Also Read | இயக்குனர் அட்லியுடன் யோகிபாபு... ஷாருக்கான் படத்தின் BTS போட்டோவா? ஆஹா வேற லெவல்

கதைக்களம்…

டாணாக்காரன் திரைப்படத்தின் கதைக்களம் 1998ஆம் ஆண்டில் நடப்பது போல அமைக்கப்பட்டு இருந்தது. தமிழ் திரையுலகம் இதற்கு முன் பல காவல்துறை சார்ந்த திரைப்படங்களைக் கண்டுள்ளது. ஆனால் டாணாக்காரன் காவல்துறை பயிற்சி பள்ளியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. போலிஸ் பயிற்சிப் பள்ளியில் மாணவர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளைப் பற்றி பேசிய இந்த திரைப்படம் வெளியானதில் இருந்து பாராட்டுகளையும் நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

இயக்குனர் ஆன காவலர்…

இந்த திரைப்படத்தின் இயக்குனர் தமிழ் அரசன் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்பீம் மற்றும் அசுரன் ஆகிய படங்களில் நடிகராகவும் தமிழ் அரசன் கவனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளியானதில் இருந்து பாராட்டுகளைக் குவித்து, இயக்குனரை அழைத்து அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சென்னை அசோக்நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் இந்த படத்தை பயிற்சி காவலர்களுக்காக திரையிடப்பட்டுள்ளது. அதில் இயக்குனர் தமிழும் கலந்துகொண்டுள்ளார். மேலும் இந்த படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து காவலர் பயிற்சி பள்ளிகளிலும் திரையிய ஐஜி அருண் உத்தரவிட்டுள்ளார்.

இயக்குனரின் மகிழ்ச்சி…

இது பற்றி சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் தமிழ் “டாணாக்காரன் திரைப்படத்தை அனைத்து காவலர் பயிற்சி பள்ளியிலும் திரையிடலுக்கு ஆணை பிறப்பித்த காவல்துறை பயிற்சி தலைவர் திரு அருண் IPS அவர்களுக்கும் அசோக்நகர் காவலர் கல்லூரியில் நடந்த திரையிடலுக்கு எங்களை அழைத்த முதல்வர் திரு மணிவண்ணன் IPS அவர்களுக்கும் படக்குழுவின் சார்பாக நன்றி” எனக் கூறியுள்ளார்.

காவலர் பயிற்சிப் பள்ளிகளை விமர்சனம் செய்து தமிழ் இயக்கிய  டாணாக்காரன் திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள காவலர் பயிற்சி பள்ளிகளில் எல்லாம் திரையிடப்பட உள்ளது அந்த படத்தின் வெற்றியாக அமைந்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

‘டாணாக்காரன்’ படத்தை இயக்குநருடன் பார்த்த காவலர்கள்… அதன் பின் எடுத்த சூப்பர் முடிவு! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Taanakaaran movie to be screened in all PRS in tamilnadu

People looking for online information on டாணாக்காரன், PRS, Taanakaaran movie, Tamilnadu, Vikram Prabhu will find this news story useful.