துடித்தெழு தோழா".. ஜிப்ரான் இசையில் இன்ஸ்பிரேஷனான டாணாக்காரன் பட லிரிக் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டாணாக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள துடித்தெழு தோழா பாடலின் லிரிக் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

கர்ப்பமான வயிறுடன் நடிகை சோனம் கபூர் நடத்திய போட்டோஷூட்... செம வைரலான போட்டோஸ்!

வித்தியாசப் பின்னணியில் டாணாக்காரன்…

விக்ரம் பிரபு நடிப்பில் எஸ் ஆர் பிரபுவின் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம நிறுவனம் டாணாக்காரன் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. டாணாக்காரன் திரைப்படத்தின் கதைக்களம் 1998ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகம் இதற்கு முன் பல காவல்துறை சார்ந்த திரைப்படங்களைக் கண்டுள்ளது. ஆனால் டாணாக்காரன் காவல்துறை பயிற்சி பள்ளியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள தமிழ் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்பீம் மற்றும் அசுரன் ஆகிய படங்களில் நடிகராகவும் தமிழ் அரசன் கவனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் லால், எம்.எஸ். பாஸ்கர், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.  மகேஷ்மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

கவனம் ஈர்த்த டிரைலர்…

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலரை நடிகர் கார்த்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. டிரைலரில் PRS எனப்படும் போலீஸ் டிரெய்னிங் இடத்தில் நடக்கும் மோசமான சம்பவங்களையும் அதை எதிர்த்து எப்படி  விக்ரம் பிரபு போராடுகிறார் என்பதையும் விறுவிறுப்பாக காட்சிப் படுத்தியுள்ளனர். மிரட்டலாக உருவாகியுள்ள இந்த டிரைலர் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 8 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துடித்தெழு தோழா லிரிக் வீடியோ….

இன்னும் சில தினங்களில் இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் இப்போது இந்த படத்தில் இருந்து உத்வேகமான துடித்தெழு தோழா என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. காவலர் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் பயிற்சிகள், விக்ரம் பிரபு எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதை முறியடிக்க போராடுவது போன்றவற்றைக் குறிப்பிடும் விதமாக பாடலின் வரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பாடலுக்கு ஜிப்ரான் இசையமைக்க, சந்துரு பாடல் வரிகளை எழுதியுள்ளார். செண்பகராஜ், அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் நாராயணன் ஆகியோர் இந்த பாடலைப் பாடியுள்ளனர். இந்த பாடல் இப்போது இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது.

”என்னோட ‘அந்த’ கனவு பொன்னியின் செல்வன்லதான் நிறைவேறுச்சு”…. கார்த்தி பகிர்ந்த வைரல் pic!

தொடர்புடைய இணைப்புகள்

Taanakaaran movie thudithezhu thozha lyric video released

People looking for online information on TaanaKaaran, Thudithezhu thozha lyric, Vikram Prabhu will find this news story useful.