தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிலம்பரசன் TR.
Also Read | "ஒரு தப்பு கண்ணுக்கு தெரியுது".. சைலண்டா கணக்கு போட்ட விக்ரமன்.. ஒரே லைன்ல Thug life பண்ண ராம் 😂!
கடந்த ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம், 100 கோடிக்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தில் உடல் எடையை குறைத்து புதிய தோற்றத்தில் சிம்பு நடித்திருந்தார்.
மாநாட்டை தொடர்ந்து, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்த "வெந்து தணிந்தது காடு" திரைப்படம், செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சூழலில் சிம்புவின் தந்தையும் பிரபல நடிகருமான டி. ராஜேந்தர் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்த பிறகு அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்த பிறகு செய்தியாளர்களை டி. ராஜேந்தர் சந்தித்தார்.
அப்போது சிம்பு திருமணம் குறித்த கேள்விக்கு டி. ராஜேந்தர் பதில் அளித்தார். அவர் பேசியதாவது, "என் மகனுக்கு பிடித்த பெண்ணை நான் தேர்ந்தெடுப்பதை விட, என் மனைவி உஷா தேர்ந்தெடுப்பதை விட, என் மகனுக்கு பிடித்த மணமகளை, அந்த குலமகளை, அந்த கலைமகளை, அந்த திருமகளை, என் இல்லத்துக்கு ஏற்ற மணமகளை அந்த இறைவன் தான் சார் தேர்வு செய்து கோடுக்கனும்" என டி. ராஜேந்தர் பதில் அளித்தார்.
Also Read | "நீங்க இல்லா வாழ்க்கை".. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' சேதுராமன் குறித்து அவரது மனைவி உருக்கம்!