சுஷ்மிதா சென்னுக்கு ஏற்பட்ட மாரடைப்பு.. சிகிச்சை குறித்து வெளியிட்ட உருக்கமான தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சுஷ்மிதா சென், தனது  இன்ஸ்டாகிராம் பதிவில், சில நாட்களுக்கு முன்பு தனக்கு மாரடைப்பு ஏற்பட்டது என கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | SSMB28: புது லுக்கில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு.. மனைவி நம்ரதா பகிர்ந்த மாஸ் போட்டோ!

தன்னுடைய 18 வயதில், மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா சென், 1996 ஆம் ஆண்டு, தஸ்தக் என்ற  பாலிவுட் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். அதே போல, தமிழில் நாகர்ஜுனாவுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த 'ரட்சகன்' படமும், ஷங்கர் இயக்கி, அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த 'முதல்வன்' படத்தில் சுஷ்மிதா சென் நடனம் ஆடி இருந்த 'ஷக்கலக்கா பேபி' பாடலும், தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

47 வயதான நடிகை சுஷ்மிதா சென்,  இன்ஸ்டாகிராமில் தனது உடல்நலம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார், மேலும் அவர் தனது தந்தை சுபீர் சென்னுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

அந்த பதிவில் "உன் இதயத்தை மகிழ்ச்சியாகவும் தைரியமாகவும் வைத்திரு, உனக்கு மிகவும்  தேவைப்படும்போது அது உன்னுடன் இருக்கும் சோனா" (என் தந்தை சுபிர் சென் சொன்ன புத்திசாலித்தனமான வார்த்தைகள்). இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. ஸ்டென்ட் போடப்பட்டது. மிக முக்கியமாக, 'எனக்கு பெரிய இதயம் இருக்கிறது' என்பதை எனது இருதயநோய் நிபுணர் மீண்டும் உறுதிப்படுத்தினார்."

மேலும் "நிறைய மக்கள்  சரியான நேரத்தில் கிடைக்கும் உதவி மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்... மற்றொரு பதிவில் அதைச் செய்கிறேன். இந்த பதிவு உங்களுக்கு (எனது நலம் விரும்புபவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு) தெரியப்படுத்துவதற்காக மட்டுமே. நல்ல செய்தி ... எல்லாம் நன்றாக இருக்கிறது, நான் மீண்டும் சிலகாலம் வாழ தயாராக இருக்கிறேன். நான் உங்களை காதலிக்கிறேன் நண்பர்களே!!!!" என நடிகை சுஷ்மிதா சென் தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

சுஷ்மிதா சென் சமீபத்தில் தனது புகழ்பெற்ற டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தொடரான ​​"ஆர்யா"வின் மூன்றாவது சீசனின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

ஆஞ்சியோபிளாஸ்டி என்பது இரத்த நாளங்கள் அல்லது தமனிகளில் திறப்பை பெரிதாக்கும் ஒரு செயல்முறையாகும்.

Also Read | மாரி செல்வராஜூடன் நடிகர் வடிவேலு.. ரிலீஸ்க்கு தயாராகும் 'மாமன்னன்' படத்தின் அடுத்த அப்டேட்!

Sushmita Sen suffers heart attack Treatment with angioplasty

People looking for online information on Sushmita sen will find this news story useful.