IPL நிறுவனர் லலித் மோடியுடன் திருமணமா? நடிகை சுஷ்மிதா சென் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி, முன்னாள் பிரபஞ்ச அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

Sushmita Sen shares a post after Lalit Modi Statement
Advertising
>
Advertising

Also Read | பிரபல நடிகர் வீட்டில் ஆமிர்கான் படத்தின் SPECIAL SHOW! யாரெல்லாம் வந்திருக்காங்கனு பாருங்க!

லலித் மோடி மற்றும் சுஷ்மிதா சென் இருவரும் சமீபத்தில் மாலத்தீவு சென்றனர். மாலத்தீவு சுற்றுலாவில் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில், லலித் மோடி பதிவிட்டுள்ளார். மேலும், "தற்போது நாங்கள் டேட்டிங்கில் தான் உள்ளோம். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. விரைவில் அது கூட நடைபெறும்" என குறிப்பிட்டு இருந்தார்.

Sushmita Sen shares a post after Lalit Modi Statement

லலித் மோடியின் வாக்குமூலத்திற்குப் பிறகு சுஷ்மிதா சென்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை  சுஷ்மிதா சென் தனக்கு திருமணமாகவில்லை என்றும், தற்போது மகிழ்ச்சியான இடத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மகிழ்ச்சியான இடத்தில் இருப்பதாக கூறி தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை சுஷ்மிதா சென். இதுமட்டுமின்றி, தனக்கு திருமணமாகவில்லை என்றும், இருவருக்குமிடையே மோதிரங்கள் எதுவும் மாற்றப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் லலித் மோடியின் பெயரைக் குறிப்பிடவில்லை மேலும் லலித்தின் ஒரு புகைப்படத்தைக் கூட பகிர்ந்து கொள்ளவில்லை.

அந்த பதிவில் "நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன்!!! திருமணம் செய்து கொள்ளவில்லை... மோதிரங்கள் மாற்றிக்கொள்ளவில்லை... நிபந்தனையின்றி அன்பால் சூழப்பட்டுள்ளேன்!! போதுமான தெளிவு கொடுக்கப்பட்டுள்ளது... இப்போது மீண்டும் வேலைக்கு!! என் மகிழ்ச்சியில் எப்போதும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...மற்றவர்களுக்கும் …எப்படியும் இது #NOYB!!! ஐ லவ் யூ தோழர்களே!!!" என்று சுஷ்மிதா சென் இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ளார்.

Also Read | துல்கர் - ராஷ்மிகா - மிருணாள் நடிக்கும் 'சீதாராமம்'.. பிரபல இயக்குனரின் மாஸ் கேரக்டர் போஸ்டர்!

மற்ற செய்திகள்

Sushmita Sen shares a post after Lalit Modi Statement

People looking for online information on Lalit Modi, Lalit Modi Statement, Sushmita sen will find this news story useful.