BREAKING: கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளர் இவரா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.

Advertising
>
Advertising

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.  அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்தது.

உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது.

இதுவரை வெளியான தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது. 30வது நாளைக் கடந்தும்  படம் வெற்றிகரமாக சில திரையரங்குகளில் ஓடுகிறது. இந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதியன்று விக்ரம் படம் 5 மொழிகளிலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது.

சிலநாட்களுக்கு முன் தனது அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் குறித்து, பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது, அவரிடம், "அடுத்த படம் பத்தி Exclusive-அ இந்த மேடையில் அவுட் பண்ணலாமா?" என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், "மாலிக் என்கிற படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் அவர்கள். ராஜ்கமல் பிலிம்ஸ்" என கூறினார்.

கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராகவும், மாலிக் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மகேஷ் நாராயணன். மேலும் மகேஷ் நாராயணன் ஒரு  ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக 50 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

மகேஷ் நாராயணின் முதல் திரைப்படமான Take-Off இந்திய மருத்துவ செவிலியர்கள் 2014 ஆம் ஆண்டில்  ஈராக் கலவரத்தில் மாட்டிக்கொண்டதை, உணர்வ்ப்பூர்வமாக விவரிக்கும் அட்டகாசமான படைப்பாக அமைந்திருந்தது. இந்திரைப்படம் அவருக்கு உலகளவில் பெரும் அங்கீகாரத்தையும் பல விருதுகளையும் பெற்று தந்தது. மேலும் இந்தியளவிலும் உலகளவிலும் நிறைய திரைவிழாக்களில் கலந்து கொண்டது. அவரது இரண்டாவது திரைபடமான Amazon Original படைப்பான  'C U SOON'  தனித்த கதைசொல்லல் மற்றும் நேர்த்தியான படைப்பாக பெரும் பாராட்டுக்களை பெற்றது.

விக்ரம் படத்தின் ஷூட்டிங்கின் போது, கமலை மகேஷ் நாராயணன் சந்தித்திருந்த புகைப்படமும் அதிகம் வைரலாகி இருந்தது. இந்நிலையில் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளராக சுசின் ஷ்யாம் பணியாற்ற உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சுசின் ஷ்யாம், 2018 இல் வரதன் மற்றும் 2019 இல் கும்பலங்கி நைட்ஸ் திரைப்படத்தின் மூலம் பிரபலமடையத் தொடங்கினார். அதன்பிறகு, வைரஸ் (2019), அஞ்சம் பத்திரா (2020), கப்பேலா (2020), டிரான்ஸ் (2020), கிலோமீட்டர்ஸ் & கிலோமீட்டர்ஸ் (2020), மாலிக் (2021), குருப் (2021) மற்றும் மின்னல் முரளி (2021) இறுதியாக மம்முட்டி நடிப்பில் அமல் நீரத் இயக்கிய பீஷ்ம பர்வம் (2022) போன்ற பல மலையாளப் படங்களில் பணியாற்றியவர்.

கும்பலங்கி நைட்ஸ் படத்திற்காக 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை அமைப்பாளருக்கான கேரள மாநில திரைப்பட விருதை சுஷின் பெற்றுள்ளார். மகேஷ் நாராயணன் Phantom Hospital எனும் படத்தை இந்தியில் தற்போது இயக்கி வருகிறார். 

தொடர்புடைய இணைப்புகள்

Sushin Shyam Tamil debut with Kamal Haasan Mahesh Narayanan film

People looking for online information on கமல் ஹாசன், Kamal Haasan, Mahesh Narayanan will find this news story useful.