ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய 3 கலைஞர்கள் … அவர்கள் மரணத்துக்குப் பிறகு ரிலீஸான படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய மூன்று கலைஞர்களின் மரணத்துக்குப் பிறகு ரிலிஸான அவர்களின் படங்கள் பற்றிய ஒரு பார்வை.

Advertising
>
Advertising


இந்தியாவை உலுக்கிய சுஷாந்த் மரணம்

கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாற்றுக் கதையான ‘எம்.எஸ்.தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’ படத்தில் தோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். சினிமாவில் எந்த பின்னணியில் இல்லாமல் சொந்த உழைப்பில் முன்னேறி கதாநாயகனாக சுஷாந்த் 2020 வருடம் ஜூன் மாதம் 14-ந் தேதி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. ஆனாலும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து பலரும் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டனர். அவரது மரணத்துக்குப் பிறகு ஜூலை 14 ஆம் தேதி அவர் நடிப்பில் உருவான தில் பெச்சேரா படம் ஓடிடியில் வெளியானது. இந்த படத்துக்கு ரசிகர்கள் பெருமளவில் ஆதரவு கொடுத்து பார்த்தனர்.

புனித்தின் மரணமும் ஜேம்ஸ் ரிலிஸும்

கன்னட திரைப்பட உலகின் முன்னணி நடிகராக விளங்கும் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உடற்பயிற்சி கூடத்தில் இருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். புனீத்தின் இழப்பு கன்னட திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகம் மற்றும் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், சிவ ராஜ்குமாரின் தம்பியுமாவார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். 

புனீத் மறைவதற்கு முன்னர் அவர் நடிப்பில் கடைசியாக உருவான படம் ஜேம்ஸ். இந்த படம் இன்று ரிலிஸானது. இந்த படத்தில் புனித்துக்கு பதிலாக அவரது அண்ணன் சிவராஜ் சிவகுமார் டப்பிங் பேசியுள்ளார். இந்த படத்தில் புனித்தோடு சரத்குமார், பிரியா ஆனந்த், ஸ்ரீகாந்த் மற்றும் அனு பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர். சேத்தன் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை இன்று கன்னட ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்புக் கொடுத்து பார்த்து வருகின்றனர்.

சித்ராவின் மரணமும் சர்ச்சைகளும்

விஜய் டிவியின் சின்னத்திரை தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலமாக நட்சத்திரமாக ஜொலித்த சித்ரா முல்லை கதாபாத்திரமாக மக்களிடையே பிரபலமடைந்தார். ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்ட்டிசம்பர் 9ஆம் தேதி பரிதாபமாக மரணம் அடைந்தார். சித்ராவின் மரணம் அவரது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.  சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படம் அவரது மரணத்துக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பரவலான கவனம் கிடைத்தது.

தொடர்புடைய இணைப்புகள்

Sushanth puneeth Vj chitra shocking demise and their films

People looking for online information on Puneeth, Sushanth Singh Rajput, VJ Chitra will find this news story useful.