நடிகர் விஜய் ஆண்டனி உடல்நிலை குறித்து இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Also Read | ராட்சசன் அடுத்து மீண்டும் இணைந்த விஷ்ணு விஷால் & ராம்குமார் COMBO.. வேறலெவல் அப்டேட்!
நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி இசையமைப்பாளராக இருந்து பிரபல நடிகராக மாறியவர். 2016ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. மேலும் ஒடியா, மராத்தி, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிச்சைக்காரன்-2 திரைப்படம் தெலுங்கில் பிச்சஃகாடு-2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை விஜய் ஆண்டனியின் சொந்த நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
இந்த படம் வரும் 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமம் & டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மலேஷியாவில் உள்ள லங்காவியில் நடைபெற்ற போது படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி காயமடைந்தார்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி உடல்நிலை குறித்து இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "பிச்சைக்காரன்-2 படப்பிடிப்பில்
விபத்தில் காயம் அடைந்த
விஜய் ஆண்டனி sir
2 நாட்களுக்கு முன்னாடியே
சென்னையில் அவருடைய வீட்டுக்கு
வந்துட்டாரு... இரண்டு வாரங்களுக்கு மருத்துவர்கள் ஓய்வு
எடுக்க சொல்லிருக்காங்க,
கூடிய சீக்கிரம் ரசிகர்கிட்ட Video மூலமா பேசுவாரு, ரசிகர்கள்
யாரும் பயப்பட வேண்டாம், Sir பற்றின தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்னு கேட்டுக்கிறேன்" என சுசீந்திரன் கூறியுள்ளார்.
Also Read | VIDEO: "நான் இயக்கிய இந்த படம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்".. காரணத்தோடு விளக்கிய H. வினோத்!