"ஆன்லைனில் ஆக்டிங், டைரக்‌ஷன் வகுப்பு!!".. கிடைத்த பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய இயக்குநர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெண்ணிலா கபடி குழு, ஜீவா, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் சுசீந்திரன்.

கபடி, கிரிக்கெட் என பெரும்பாலும் விளையாட்டு போட்டிகளை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் தமது திரைப்படங்களில் விஷால் மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்டோரின் நடிப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் கடைசியாக சிம்புவை வைத்து சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கல் ரிலீஸாக வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியது. இதனைத் தொடர்ந்து அந்த திரைப்படம் இந்த ஜூன் மாதம் முதல் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிவருகிறது.

இந்நிலையில் தான் சுசீந்திரன், வெண்ணிலா ஃபியூச்சர் சினிமாஸின் கீழ், 10 நாட்கள் நடிப்பு மற்றும் இயக்கம் தொடர்பான ஆன்லைன் வகுப்புகளை எடுத்தார். இதற்கு வசூலித்த கட்டணம் மூலம் கிடைத்த ரூ. 5 லட்சம் ரூபாய் பணத் தொகையை முதல்வரின் கொரோனாவை கட்டுப்படுத்தும் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

இயக்குநர் சுசீந்திரன் வழங்கிய இந்த நிதித் தொகையை நடிகர், திமுக இளைஞரணி செயலாளர், முதல்வரின் மகன் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி  எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ: நடிகை அளித்த பாலியல் புகார்! முன்னாள் அமைச்சர் மீது போலீஸார் பரபரப்பு நடவடிக்கை!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Suseenthiran donates Rs 5 lakh covid relief to udhayanithi

People looking for online information on Coronavirus, Covid19India, Covidindia, CovidRelief, DMK, MKStalin, Suseenthiran, TN Chief Minister, Udhayanidhi Stalin will find this news story useful.