ஜெய் படத்தின் டைட்டிலை மாற்றிய சுசீந்திரன்: "சிவ சிவா"க்கு பதிலாக புதிய டைட்டில் என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்த 'சிவ சிவா' என்ற திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

அடுத்தடுத்து தியேட்டரில் ரிலீஸ் ஆகும் மாஸ் ஹீரோ படங்கள்.. எது? & எப்ப?.. Full List ரெடி!.. இனி ஜமாய் தான்!

'வெண்ணிலா கபடிக்குழு', நான் மகான் அல்ல, ஜீவா, பாண்டியநாடு, மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களின் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்பவர் சுசீந்திரன். இயக்குனர் சுசீந்திரன் சிம்புவை வைத்து கடைசியாக 'ஈஸ்வரன்' படத்தை இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து ஜெய்யுடன் முதல் முறையாக இணைந்து பணியாற்றிவரும் திரைப்படம் 'சிவ சிவா' கிராமத்து கதையம்சத்தை கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர், பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

சிவ சிவா திரைப்படத்தின் "அம்மம்மா" பாடலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தது. விஜய்யின் பகவதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜெய், சென்னை 28, வாமனன், சுப்ரமணியபுரம், வடகறி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் ஜெய் இப்படத்தை தொடர்ந்து மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை Lendi Studio சார்பாக எஸ்.ஐஸ்வர்யா தயாரித்துள்ளார். வேல்ராஜ் படத்தொகுப்பில், நடிகர் ஜெய் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டிலை மாற்றியுள்ளதாக படத்தின் இயக்குநர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,
ஜெய் நடிப்பில் 'சிவ சிவா' என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளேன். விரைவில் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த திரைப்படத்தை பார்த்த என் நண்பர்கள் வெகுவாக என்னையும் என் படக்குழுவினர்களின் பாராட்டினார்கள். அவர்கள் என்னிடம் ஒரு வேண்டுகோளை முன் வைத்தார்கள்.  இத்திரைப்படம் கிராமம் சார்ந்த திரைப்படமாக இருப்பதால் 'சிவ சிவா' திரைப்படத்திற்கு மாற்றாக மண்சார்ந்த கிராமத்து தலைப்பு இருந்தால் இன்னும் இத்திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று கூறினார்கள்.

அவர்கள் கூறிய ஆலோசனையில் எனக்கு உடன்பாடு ஏற்பட்டதால் தயாரிப்பாளர் அவர்களின் சம்மதத்துடன் என் உதவியாளர்களுடன் ஆலோசித்து 'சிவ சிவா' என்ற தலைப்பை மாற்றி 'வீரபாண்டியபுரம்' என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.

40 YEARS OF மூன்றாம் பிறை:சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய போட்டியை அறிவித்த பாலு மகேந்திரா நூலகம்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Suseenthiran changed the title of the film Siva Siva

People looking for online information on இயக்குனர் சுசீந்திரன், சிவ சிவா, ஜெய், Director, Film, Jai, Siva Siva, Suseenthiran will find this news story useful.