இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் டிக் டாக் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் சினிமாத்துறையில்நுழைந்தவர்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சிறிது சர்ச்சையான வீடியோக்கள் மூலம் பிரபலமடைந்தவர் சூர்யா ரவுடி பேபி. இவரை பலரும் டிக்டாக்கில் பின்தொடருக்கின்றனர்.
வேலைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த அவர் தற்போது நாடு திரும்பினார். எனவே அவரை தனிமைபடுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். ஆனால் அதனை கேட்காமல் அவர் தனது வீட்டுக்கு திரும்பினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே விரைந்து வந்த அவர்கள் டெஸ்டுக்கு ஒத்துழைக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஒருவழியாக அவர் பின்பு தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் ரவுடி பேபி சூர்யா தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது விசாரணையில் தான் தெரியவரும்.
மனஅழுத்தம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.