நேருக்கு நேர் TO எதற்கும் துணிந்தவன் – நடிகர் சூர்யாவின் 25 வருட திரைப்பயணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேருக்கு நேர் மூலம் சினிமாவில் அறிமுகமான சூர்யா 25 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமான முன்னணி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் திகழ்கிறார்.

Advertising
>
Advertising

'சிம்பு'வை தொடர்ந்து..CWC-யில் என்ட்ரி கொடுத்த இளம் நடிகர்.. "செட்டே சும்மா அமர்க்களம் ஆயிடுச்சே"

நேருக்கு நேர் சூர்யா

1997-ல் நேருக்கு நேர் திரைப்படம் மூலமாக தொடங்கியது அவரது சினிமா பயணம். முதல் படத்தில் விஜய்யோடு இணைந்து நடித்தார் சூர்யா. அதன் பின்னரும் இருவரும் ஃப்ரண்ட்ஸ் படத்தில் இணைந்து நடித்தனர். தொடந்து பல படங்களில் நடித்து வந்த அவருக்கு நந்தா, காக்க காக்க மற்றும் கஜினி ஆகிய படங்கள் திருப்புமுனையாக அமைந்தன.  இதற்கிடையில் தன்னுடன் பல படங்களில் நடித்த ஜோதிகாவுடன் காதல் கொண்ட சூர்யா, அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு தேவ் மற்றும் தியா என்று இரு குழந்தைகள் உள்ளனர்.

முன்னணி ஆக்ஷன் ஹீரோ

நடிகர் சூர்யா நடித்த  வாரணம் ஆயிரம், அயன் மற்றும் சிங்கம் வரிசை படங்கள் அவரை முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக்கின. தமிழ் தவிர தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க மார்க்கெட் உள்ள ஹீரோவாக வளர்ந்துள்ளார் சூர்யா. கடந்த ஆண்டு கொரோனா அலையால், தியேட்டர்கள் மூடப்பட்டு படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகத் தொடங்கியபோது திரையுலகிலும், தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியிலும் சில அதிருப்தி மற்றும் எதிர்ப்புக் கருத்துக்கள் எழுந்தன. ஆனால் துணிச்சலுடன் தமிழில் ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் குறிப்பிட்ட ஓடிடி தளத்தில் வெளியான முதல் படமாக அமைந்தது. அத்துடன் நிற்கவில்லை. இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்காராவின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 'சூரரைப்போற்று' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பிரமாண்டமான வெற்றி பெற்றது.  மேலும் சூரரைப்போற்று' திரைப்படம் ஆஸ்கர் விருது பட்டியல் வரை சென்றது.

எதற்கும் துணிந்தவன்

இந்நிலையில் தான் சூர்யாவின் 40வது படமான 'எதற்கும் துணிந்தவன்' தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள நிலையில், வினய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. 'எதற்கும் துணிந்தவன்' எனும் இதே தலைப்பில் 1977-ல் சூர்யாவின் தந்தை சிவக்குமார் நடிப்பிலான திரைப்படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பில் கவனம்

சூர்யா- ஜோதிகா இணையர் தங்கள் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் குழந்தைகளுக்கான படம், குடும்ப படங்கள், பெண்களை மையப்படுத்திய படங்கள், மோட்டிவேஷ்னல் படங்கள், சமூக-அரசியல் கருத்துள்ள படங்களை அதிகம் தயாரித்து வருகின்றனர். இந்த நிறுவனம் தயாரித்த பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தன. இப்போது இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்த சில படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

எதிர்கால படங்கள்

எதற்கும் துணிந்தவன் படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் 'வாடிவாசல்' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதற்கும் துணிந்தவன் interval-ல் செம்ம சர்ப்ரைஸ்… கொண்டாடி தள்ளிய விஜய் ரசிகர்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Surya long 25 year journey nerukku ner to Etharkkum Thunindhavan

People looking for online information on 25 years of journey, Etharkkum Thunindhavan, Ghajini, Nerukku Ner, Suriya will find this news story useful.