”உன்ன வளக்குறதே உலகப் போரா இருக்குடா”….’ ஓ மை டாக்’ படத்தின் கலக்கலான டிரைலர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா தயாரிப்பில் அருண் விஜய், அவரின் மகன் அர்ணவ் விஜய் மற்றும் தந்தை விஜய்குமார் ஆகியோர் நடிக்கும் ஓ மை டாக் திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது.

Advertising
>
Advertising

”என்ன ப்ரோ all okay”… சதீஷ் படத்தின் போஸ்டருக்கு மிர்ச்சி சிவாவின் செம்ம ரியாக்ஷன்!

ஓடிடியில் கலக்கும் சூர்யாவின் படங்கள்…

சூர்யாவின் தயாரிப்பில், சூரரைப் போற்று, ஜெய்பீம், உடன்பிறப்பே, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் உள்ளிட்ட திரைப்படங்கள் நேரடியாக ப்ரைம் வீடியோவில் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது 'ஓ மை டாக்' திரைப்படமும் ஏப்ரல் 21 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறை நடிகர்கள்….

நடிகர் அருண் விஜய் மற்றும் அவரது மகன் அர்னவ் விஜய் (அறிமுகம்) மற்றும் அருண் விஜய்யின் தந்தை விஜய்குமார் ஆகிய மூவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள "ஓ மை டாக்" (oh my dog) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்தினை நடிகர் சூர்யாவின்  "2D  என்டர்டெய்ன்மென்ட்" நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இயக்குனர் சரோவ் ஷண்முகம் எழுதி இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நாய் ஒன்றும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. படத்தில் வினய் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அமேசான் வெளியீடு…

ஏப்ரல் 21 ஆம் தேதி, இந்த திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு  ஆகிய மொழிகளில், வெளியாகவுள்ளது. அர்ஜுன் கதாபாத்திரத்தில் வரும் அர்னவ் மற்றும் கண் பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பா பற்றிய நெகிழ வைக்கும் கதையாகவும் இது உருவாகியுள்ளது. குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் பார்த்து மகிழக் கூடிய வகையிலும் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வெளியான டிரைலர்…

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. அபூர்வ ப்ரீட் வகை நாய் ஒன்று அர்ஜுனிடம் கிடைக்க, அதை அபகரிக்க பலர் முயற்சி செய்கின்றனர். நாயின் மூலம் அருண் விஜய் குடும்பத்துக்குள்ளும் பிரச்சனைகள் ஏற்பட இறுதியில் என்ன ஆகிறது என்பதை கலகலப்பாக சொல்லும் விதமாக டிரைலர் உருவாகியுள்ளது. இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்தை பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

தியேட்டரில் தெறிக்க விட்ட ’நாட்டுக்கூத்து’ பாடல்… வெளியான செம்ம அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Surya arun vijay combo oh my dog trailer released

People looking for online information on Arun Vijay, Oh my dog trailer, Surya, Surya arun vijay combo will find this news story useful.