"இது முதல் படம்".. ‘பிரம்மாஸ்திரா’-வில் பிருந்தா – கமெண்டில் வாழ்த்திய சூர்யா & கார்த்தி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா.  அயன் முகர்ஜி இந்தப் படத்தை இயக்க பிரபல தயாரிப்பாளர்  கரன் ஜோகர் தயாரித்துள்ளார். பிரமாண்ட படைப்பாக பெரும் பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் இந்த முதல் பாகத்தை Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து இப்படத்தை வெளியிடுகின்றனர்.

Advertising
>
Advertising

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் அமிதாப் பச்சனும் நடித்திருக்கிறார்.  தவிர, இப்படத்தில் நடிகர் ஷாருக் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியாகியுள்ளது. பிரம்மாஸ்திரா: முதல் பாகம், இஷா என்ற பெண்ணுடன், காதலின் விளிம்பில் இருக்கும் ஒரு இளைஞனும் கதாநாயகனுமான சிவாவின் கதை ஆகும்.

முன்னதாக இப்படம் குறித்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேசும்போது, “இங்கு நான் ஒரு இயக்குநராக வரவில்லை. இத்திரைப்படத்தை வழங்குபவராகவே வந்துள்ளேன். இந்த வருட இந்திய திரைப்பட வரலாற்றில் பிரமாஸ்திரம் திரைப்படம் முக்கியமானதாக திகழும். நம் இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் இருந்து உருவான கற்பனை கதைதான் இந்த திரைப்படம். கரன் ஜோகர், அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, ஆலியா பட் போன்றவர்களின் பங்களிப்பினால் இப்படம் 8 வருட கடின உழைப்புக்கு பின் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் அஸ்திரங்களை பற்றி கமர்சியலாக அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் எடுத்துரைக்கிறது. நானும் இந்த திரைப்படத்தில் இணைந்ததில் மகிழ்கிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த திரைப்படத்தில்தான் நடிகர் சிவகுமாரின் மகளும், சூர்யா & கார்த்தியின் சகோதரியுமான பிருந்தா இணைந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள பிருந்தா, “என்னுடைய முதல் டப்பிங்.. பிரம்மாஸ்திரா திரைப்படத்தில் ஆலியா பட்க்கு குரல் கொடுத்திருக்கேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த பிருந்தாவின் சகோதரர்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே பிருந்தாவின் அந்த பதிவில் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்து மேலும் பல பிரபலங்கள் பிருந்தாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Surya and karthi sister brindha sivakumar in bramhastra

People looking for online information on Brindha Sivakumar, Karthi, Suriya will find this news story useful.