சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம்.. ஷூட்டிங் இந்த ஊர்லயா? மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | நீடூழி வாழ்க மாமன்னனே.. வடிவேலுவுக்கு வெச்ச வேறலெவல் ட்ரீட் .. அசத்திய உதய் - மாரி

சமீபத்தில் ‘சூரரைப் போற்று' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பன்முகத் திறனுக்காக அகாடமி விருதுகளில் (ஆஸ்கார்) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு கௌரவ அங்க்கீகரத்தையும் பெற்றிருக்கும் தென்னிந்திய முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குநர் சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார்.

Studio Green & UV Creations நிறுவனங்கள் சார்பில் வம்சி கிருஷ்ணா,  பிரமோத் & KE ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா42’ என தலைப்பிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர். இது ரசிகர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. போஸ்டரில் சூர்யா  கூர்மை மிகு போர் வீரனாக, மிடுக்கான தோற்றத்தில் அசத்தலாக இருக்கிறார்.  DSPயின் பின்னணி இசையும் விஷுவலும்  ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளிப்பதாக அமைந்தது. 

மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தில்  பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை பிரபல கமர்ஷியல் இயக்குநர் சிவா இயக்குகிறார்.  வலிமை மிகு வீரம் எனும் அடைமொழியுடன் வரும் டைட்டில் கதையின் தன்மையை சொல்வதாக அமைந்தது.

இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மிலன் கலை இயக்குனராக  இந்த படத்தின் எடிட்டராக பிரபல மலையாள சினிமா எடிட்டர் நிஷாத் யூசுப் பணிபுரிகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் கோவாவில் துவங்க உள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | VTK: சென்சாரான 'வெந்து தணிந்தது காடு'.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் & RUNNING TIME விவரம்!

தொடர்புடைய இணைப்புகள்

Surya 42 shoot will resume this week in GOA

People looking for online information on Goa, Siruthai Siva, Suriya, Surya 42 Movie Updates will find this news story useful.