"நீங்க மட்டும் வுமன் அபியூஸ் பண்லயா?".. கடுப்பில் பாலாஜியை சுருதி கேட்ட சர்ச்சை கேள்வி BBULTIMATE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Bigg Boss Ultimate: டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி.

Advertising
>
Advertising

பிக்பாஸ் ஓடிடி

இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் எபிசோடு விஜய் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பானது. இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், தாமரை செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Also Read: ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படம். டைரக்டர், மியூசிக் டைரக்டர் இவங்க தான்.. வெளியான  ‘கொலமாஸ்’ அறிவிப்பு

சுரேஷ் எலிமினேற்றம்

முன்னதாக இந்த நிகழ்ச்சியிலிருந்து சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டார். சுரேஷ் தாத்தா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி. இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேலும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க் இன்னும் வலுவாகி வருகிறது.

திருடன் போலீஸ் டாஸ்க்

இதனிடையே ஒரு ஜாலியான டாஸ்க்காக திருடன் போலீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த திருடன் போலீஸ் டாஸ்க்கின் முந்தைய சீசனக்ளில் போட்டியாளர்கள் மிகவும் ஜாலியாக இருப்பார்கள். ஆனால் இந்த பிக்பாஸ் ஓடிடி முதல் சீசனில் விறுவிறுப்பான டாஸ்க் ஆக மாறி இருக்கிறது. இதில் போட்டியாளர்கள் சிலர் போலீசாகவும் சிலர் திருடர்களாகவும் இன்னும் ஆக்ரோஷமாகவும் விளையாடி வருகின்றனர்.

காயினாக இருந்தா எடுத்துருப்பீங்க..

அதில்தான், டைமண்ட் எடுத்து வைத்துக் கொள்ளும் டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது இதுபற்றி பேசிய பாலாஜி முருகதாஸ், சுருதியிடம், எதார்த்தமாக, “நீங்கள் காயினாக இருந்தால் எடுத்து வைத்திருப்பீர்கள். டைமண்ட் என்பதால் எடுத்துக்கொள்ளவில்லையா?” என்று கேட்க, பதிலுக்கு சுருதியும் ஒரு கவுண்டர் கொடுத்திருக்கிறார்.

வுமன் அபியுஸர் ..

ஆம், பாலாஜியை பார்த்து சுருதி, “நீங்கள் கூட தான் உங்களுடைய சீசனில் வுமன் அபியுஸ் செய்தீர்கள். அதைப்பற்றி எல்லாம் பேச முடியுமா?” என்று சொல்ல உடனே பாலாஜி முருகதாஸ் கோபப்பட்டு விட்டார். இருப்பினும் கூலாகவே டீல் செய்த, பாலாஜி, “என்னங்க பேசுறீங்க” என்று வினவ, பிறகு ஒரு வழியாக சாரி கேட்டு விட்ட சுருதி, “நான் தான் சாரி கேட்டு விட்டேன் அல்லவா? இது ஒரு விஷயமாக எடுத்துக்கொண்டு விட்டு மிகவும் சீன் போடாதீர்கள்!” என்று மறுபடியும் பேசியிருக்கிறார்.

பழைய பாலாஜியா இருந்தா..

இது பாலாஜி முருகதாஸை இன்னும் கோபப்படுத்தி விட்டது. ஆனால் முந்தைய சீசன் பாலாஜியாக இருந்தால் நடப்பதே வேறு, இந்த முறை பாலாஜி முருகதாஸ் இதை கூலாக டீல் பண்ணியிருக்கிறார் என்று ரசிகர்கள் ஒருவரை பாராட்டி வருகின்றனர். அதேபோல் சுருதி பேசிய இதே கருத்தை ஆக்‌ஷரா பேசி கண்டிப்பாக பேசியிருக்க மாட்டார. காயின் விஷயத்திற்கு இப்படி, ‘வுமன் அபியுஸ்’ என்கிற வார்த்தையை பயன்படுத்தி இருக்க தேவையில்லை என்று ரசிகர்கள் ஒருபுறம் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இருவருமே பின்னர் மன்னிப்புக்கொண்டுவிட்டனர். 

24 மணி நேரமும்.. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்பை போல் அல்லாமல் இந்த ஓடிடி நிகழ்ச்சி, எந்தவித சென்சார் கட் மற்றும் பெரிய அளவிலான காட்சிகள் கட் பண்ணப்படுவது உள்ளிட்ட விஷயங்கள் இல்லாமல் நடக்கிறது. பெரும்பாலும் ஒரு நாள் முழுவதும் நடக்கக் கூடிய விஷயங்களை 24 மணி நேரமும் நேரலையில் காட்டப்பட்டு வருகிறது.

அதே போல் இந்த நிகழ்ச்சியின் 24 மணிநேரமும் நேரலை காட்சி ஓடிக் கொண்டிருப்பது போல, மொத்த நிகழ்ச்சியும் ஒரு மணி நேரமாக இரவு 9 மணிக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தினமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "இது கொழந்த மேல சத்தியம்".. வயித்துல அடிச்சு சபதம் எடுத்த அர்ச்சனா.. அப்ப எல்லாமே நடிப்பா?

தொடர்புடைய இணைப்புகள்

Suruthi said balaji women abuser bigg boss ultimate controversy

People looking for online information on Balaji Muragadoss, Balaji Women abuser, BBUltimateTamil, Bigg Boss Ultimate Tamil, Suruthi Balaji, Suruthi women abuser will find this news story useful.