நடிகர் சத்யராஜ் சமூக விசயங்கள் பலவற்றிற்காக குரல் கொடுத்து வருகிறார். பெரியாரின் வழியை பின்பற்றும் அவர் சமத்துவ நீதி கிடைக்க கருத்துக்கள் முன்வைத்து வருகிறார்.

தற்போது அவரை மிகுந்த மனவேதனையடைய வைத்திருக்கும் விசயம் சிறுவன் சுர்ஜித் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்ததே. தமிழ்நாடு முழுக்க இந்த சம்பவத்தின் சோகம் சூழ்ந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை விழுந்த சிறுவனை மீட்க இரண்டு நாட்களாக கடும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அது குறித்த விசயங்கள் நேரலையாக பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சத்யராஜ் குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது மிகுந்த வேதனை தருகிறது குழந்தை நிச்சயம் மீட்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.