சூரரைப் போற்று படத்தின் ரியல் ஹீரோ கேப்டன் கோபிநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கிய இத்திரைப்படம் விமான சேவை நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி உருவானது. அமேசானில் வெளியான இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் ரியல் ஹீரோவான கேப்டன் கோபிநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவரது பெயரில் போலியாக தொடங்கப்பட்டு, செயல்பட்டு வரும் இன்ஸ்டாகிராம் பக்கம் குறித்து குறிப்பிட்டுள்ள அவர், ''இந்த அக்கவுண்ட்டை நான் உபயோகம் செய்வதில்லை'' என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பல்வேறு பிரபலங்கள் தொடர்ந்து இதுபோல சோஷியல் மீடியாவில் போலி அக்கவுன்ட் மோசடிகள் குறித்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.