சூர்யாவின் சூரரைப் போற்று.. சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு.. மாஸ் தகவல்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் குறித்து சர்ப்ரைஸான தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சம்மருக்கு வெளியாகவிருந்த சூரரைப் போற்று, லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூரரை போற்று திரைப்படத்தில் இருந்து ஒரு சர்ப்ரைஸான தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வருகிற 23-ஆம் தேதி தனது பிறந்தநாளை சூர்யா கொண்டாடுகிறார். இதையடுத்து அன்று காலை 10 மணிக்கு, சூரரைப் போற்று திரைப்படத்தில் இருந்து காட்டு பயலே எனும் பாடலின் ஒரு நிமிட வீடியோ காட்சி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரவுடி பேபி பாடலை பாடிய தீ, இந்த பாடலை பாடியுள்ளாராம். இந்த புதிய தகவல் சூர்யாவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சூர்யாவின் சூரரைப் போற்று டீமின் சர்ப்ரைஸ் தகவல் | Suriya's Soorarai Pottru Kattu payale releases on his birthday

People looking for online information on GV Prakash Kumar, Kattu payale, Soorarai Pottru, Sudha Kongara, Suriya will find this news story useful.